கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை சரிசெய்ய அசோலாவை உற்பத்தி செய்வது கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
அசோலா நீரில்வளரக்கூடிய ஒரு தாவர வகையை சேர்ந்ததாகும் இதனை கம்மல் பாசி என்று அழைப்பார்கள் மிக வேகமாக வளர்ந்து குறுகிய காலத்திலேயே அதிக மகசூலை கொடுக்கவல்லது.
சத்துக்கள்:
அசோலாவில் 25 முதல் 35 சதவீதம் வரை புரதச்சத்தும் 45 முதல் 50 சதவீதம் வரை மாவுச் சத்தும் தாது சத்துக்கள் 10 முதல் 15 வரை சதவீதமும் மற்றும் அமினோ அமிலங்கள் 7 முதல் 10 சதவீதம் இருக்கின்றன மேலும் தாது உப்புக்கள் மற்றும் பலர் நுண்ணூட்ட சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.
உற்பத்தி:
கரவை மாடு ஒருநாளைக்கு இரண்டு கிலோ வரை கொடுத்தால் பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் கொழுப்புச்சத்து 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.
ஆரோக்கியம்:
மாடுகளின் உடல் ஆரோக்கியமும் அதிகரிப்பதோடு தினமும் அசோலாவை கலப்பு தீவனத்துடன் கலந்து அளிப்பதன் மூலம் பசுந்தீவனத்தை அளவு குறைக்கப்படுகிறது