அசோலா வளர்ப்பு….

அசோலா வளர்ப்பு….

இந்த உலகத்தில் தோன்றிய தொன்மையான உயிரினங்களில் பெரணி வகையைச் சார்ந்த அசோலாவும் ஒன்று. பார்ப்பதற்கு கம்மல் போல இருப்பதால் ‘கம்மல் பாசி’ என்றும் சொல்கிறார்கள். இதில், வாழும் ‘அனபீனா அசோலா’ என்ற பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகிக்கின்றன. இதில் சுமார் 26% தழைச்சத்து உள்ளது.
ஒரு பாத்திரம் அல்லது தொட்டியில் 7-10 செ.மீ. உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும். பாலிதீன் ஷீட் மற்றும் செங்கற்களை பயன்படுத்தியும் தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். சூரிய ஒளி படும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்கவேண்டும். தொட்டியில் இருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, பாறைத்தூள் ஒரு கைப்பிடி, அசோலா விதைகள் ஒரு கைப்பிடி போட்டுக் கலக்கி விடவும். அடுத்த ஒரே வாரத்தில் பத்துமடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டும் என்றால் சாணம் மற்றும் பாறைத்தூளை தொட்டியில் போட்டால் போதும்… பெருக ஆரம்பித்து விடும்.

இந்த அசோலாவை நெல் வயலுக்கு இட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும். வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்துவிடவும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரம்தான் இந்த அசோலா. இதை பால் மாடுகளுக்குக் கொடுத்தால் அதிக பட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% தீவனச் செலவு குறையும். கோழி களுக்கு கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்கு போட்டால் விரைவாக வளரும். புரதச் சத்து மிகுந்த இந்த பாசியில் வடை, போண்டா செய்து நாம் சாப்பிடலாம்.

கொசுறு தகவல்: அசோலா வளர்க்கப் படும் இடங்களை கொசுக்கள் எட்டிக்கூட பார்க்காது.
1. செங்கல், பாலிதீன் விரிப்பு…
2. அசோலா தொட்டி தயார்…
3. நிலத்தின் மேல்மண்…
4. சாணம்…
5. பாறைத்தூள் ஒரு கைப்பிடி…
6. அசோலா விதை தூவும் பணி…

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories