இயற்கை விவசாயத்திற்கு மிக முக்கியமான ஒன்று அசோலா!

கிராமப்புற மக்களால், ‘கம்மல் பாசி’ என்று அழைக்கப்படும் அசோலா, ஒவ்வொரு விவசாயி தோட்டத்திலும் இருக்க வேண்டிய, வளர்க்க வேண்டிய உயிரி.
அதுவும், இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு, அசோலா ஒரு அட்சய பாத்திரம் என்றே சொல்லலாம்.
மண்ணை வளப்படுத்துவது மட்டுமின்றி, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பிலும், முக்கிய பங்கு வகிக்கிறது.
அசோலாவை ஒருமுறை வளர்க்கத் துவங்கி விட்டால், பலமுறை வளர்ந்து பலன் கொடுக்கும். குறைந்த செலவில், எளிய முறையில், அசோலாவை வளர்க்க முடியும் என்றார் .
அதற்கு, தொட்டியில், 7 செ.மீ., முதல், 10 செ.மீ., உயரத்துக்கு தண்ணீரை தேக்கிக் கொள்ளவும். பாலித்தீன் ஷீட் மற்றும் செங்கற்களை பயன்படுத்தியும், தரையிலேயே தொட்டியை உருவாக்கி கொள்ளலாம்.
சூரிய ஒளி படும் இடத்தில், இந்தத் தொட்டி இருப்பது அவசியம்.
தொட்டியிலிருக்கும் தண்ணீரில், சாணம், 1 கிலோ, பாறைத்துாள் ஒரு கைப்பிடி, அசோலா ஒரு கைப்பிடி போட்டு கலக்க வேண்டும் என்றார் .
அடுத்த ஒரே வாரத்தில், 10 மடங்கு அளவுக்கு, அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டுமென்றால், சாணம் மற்றும் பாறைத்துாளை தொட்டியில் போட்டால் போதும். அப்படியே பெருக ஆரம்பித்து விடும்.
நெல் பயிரில் ஏக்கருக்கு, 20 கிலோ என்ற அளவில், அசோலாவை இடலாம். நெல் வயலில் பச்சை போர்வை போர்த்தியது போல் படர்ந்திருக்கும். இதனால், நீர் ஆவியாவது தடுக்கப்படும்;
நெற்பயிரில் ஏற்படும் களைகளும் கட்டுப்படும். வழக்கத்தை விட கூடுதலாக, விளைச்சல் கிடைக்கும்.
நெல் அறுவடை வரை, அசோலாவை வயலில் வைத்திருக்க கூடாது. இரண்டாம் களை எடுக்கும் போது, அசோலாவை வயலிலேயே மிதிக்க விட வேண்டும். இதன் மூலம் தழை, மணி, சாம்பல் போன்ற முக்கிய சத்துகள், பயிர்களுக்கு கிடைக்கும்.
நெல் சாகுபடியை பொறுத்தவரை, மூன்று போகம் அசோலாவை தொடர்ந்து இடுபொருளாக பயன்படுத்தி வந்தால், அந்த வயலில் நல்ல விளைச்சல் கிடைக்கும்; மண் வளமும் பெருகி விடும்.
அடுத்த போகத்தில் எந்த பயிரை சாகுபடி செய்தாலும், நல்ல விளைச்சல் கிடைக்கும்.
அந்த அற்புதமான உயிர் உரத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதல் முறை அசோலாவை வளர்க்கும் போது, சிலருக்கு சரியாக வளராது; அடுத்த முறை சாணம், பாறைத்துாளை சரியான அளவில் பயன்படுத்தினால், நிச்சயம் சிறப்பாக வளர்ந்து, பலன் கொடுக்கும்.
எனவே, முதல் முயற்சியில் தடை ஏற்பட்டால், தயங்கி விட்டு விட வேண்டாம் என்றார் .தொடர்புக்கு: 09600612649

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories