எளிமையாக அசோலா வளர்க்க ரெடிமேட் பெட்டுகள்

எளிமையாக அசோலா வளர்க்க ரெடிமேட் பெட்டுகள்

அசோலா வளர்ப்பு
ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி போன்ற கால்நடைகளுக்கு செலவில்லாத அற்புத தீவனமாகவும், மனிதர்களுக்கு மிகச் சிறந்த உணவாகவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து வாழ வைக்கும் தாயாக விளங்கும் தாவரங்களுக்கு உன்னதம் மிகுந்த உயிர் உரமாகவும் அமைந்து வளம் தரக்கூடிய ஆதி தாவரமாகிய “அசோலா” என்னும் நீலப்பச்சைப்பாசி நீரில் வளரும் பாசி வகையாகும்.

செலவின்றி வளரும்அசோலா வை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 2 கிலோ வரை கொடுக்கலாம். இதன் காரணமாக 2 லிட்டர் பால் கூடுதலாக கிடைக்கும். புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை போன்ற தீவனங்களின் அளவை பாதியாக குறைத்துக் கொடுக்கலாம். மாடுகளின் சினைபிடிப்பு தன்மை மேம்படும்.

இதேபோல ஆடு, கோழி, மீன், முயல், பன்றி என அனைத்து கால்நடைகளுக்கும் செலவில்லாத தீவனமான பயன்படுத்தி வளம் காண்பதுடன் அதிக வருமானமும் பெறலாம்.

அசோலா வளர்க்க தேவையான பொருட்கள் எவை என பார்ப்போம். ரெடிமேட் பெட் 6அடி அகலம், 12அடி நீளம் 1அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். இதன் அளவு சிறிது கூட குறைய அமையலாம். இந்த தொட்டியினுள் 2 அங்குலம் அளவு நீர் நிரப்ப வேண்டும். 10 கிலோ மாட்டுச் சாணத்தை கொட்டி நன்கு கரைத்து கலந்துவிட வேண்டும். இந்த தொட்டியினுள் 1 அல்லது 2 கிலோ அசோலா விதைகளை தூவி கலந்துவிட வேண்டும். ஒரு வாரத்தில் தொட்டி முழுவதும் அசோலா நிரம்பி வளர்ந்துவிடும். தினமும் 2 1/2கிலோ அசோலா அறுவடை செய்யலாம். இந்த தொட்டியினை 50 சதவீதம் நிழல் கிடைக்கும் வகையில் மர நிழலில் அமைக்க வேண்டும்.

அறுவடை செய்த அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசி எடுத்து மாடுகளுக்கு 2 கிலோ வரை தவிடு கலந்து கொடுக்கலாம். ஆடுகளுக்கு 300 கிராம் முதல் 500 கிராம் வரை கொடுக்கலாம். கோழிகளுக்கு 30கிராம் அளவு கொடுக்கலாம். மீன் வளர்க்கும் குளத்தில் அசோலாவை தூவிவிடுவதன் மூலம் தேவையான அளவு உட்கொள்ளும்…

அசோலா ரெடிமேட் பெட் 10 நிமிடத்தில் அமைக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories