காளானின் உபரிநீரை, அசோலா மற்றும் கீரைகளுக்கு பயன்படுத்தலாம்!

நவீன தொழில்நுட்பத்தில் வளர்க்கப்படும் இன்டோர் காளான் (Mushroom) பண்ணையிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு அசோலா வளர்த்து அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரைக் கொண்டு கீரை மற்றும் கற்றாழை வளர்க்கும் புதிய தொழில்நுட்பத்தில் தண்ணீரை சிக்கனப்படுத்தலாம் என்றார்.

காளான் வளர்ப்பில் அசோலா:
காளான் வளர்க்கும் போது வைக்கோல் ஈரப்பதத்தால் (Moisture) வளருமே தவிர அது தண்ணீரை உறிஞ்சாது. மழைக்காலத்தில் குடிலில் தினமும் ஒரு முறையும் வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறையும் தண்ணீர் தெளித்து காளான் (Mushroom) வளர்வதற்கான ஈரப்பதத்தை பாதுகாப்போம். அந்த தண்ணீர் கீழே விழுந்து வழியும் போது அதை ஒரு குழாய் மூலம் சேகரித்து பக்கத்தில் தொட்டி அமைத்து அந்த தண்ணீரில் அசோலா வளர்க்கலாம்.

தண்ணீர் சிக்கனம்:
அசோலா வளர்ப்பிற்கு சிமென்ட் தொட்டியில் மாட்டுச்சாணம் (Cow dung) சூப்பர் பாஸ்பேட்டை 3-க்கு 1 என்ற அளவில் சேர்க்க வேண்டும். ஒரு கிலோ அசோலா தயாராவதற்கு 109.54 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கீரை மற்றும் கற்றாழை செடி வளர்க்க பயன்படுத்தலாம். ஒரு கிலோ கீரை உற்பத்தி (Production) செய்வதற்கு 234.29 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மொத்தமாக ஒரு கிலோ காளான், ஒரு கிலோ அசோலா, ஒரு கிலோ கற்றாழை மற்றும் ஒரு கிலோ கீரை தயாரிப்பதற்கு 2,286.9 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது எனவே,
காளானுக்கு தெளிக்கப்படும் சாதாரண தண்ணீர் அசோலா வளர்ப்பின் போது ஊட்டச்சத்து நிறைந்ததாக மாறுகிறது. இது காற்றிலுள்ள நைட்ரஜன் (Niyrogen), பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்தை தண்ணீரில் நிலை நிறுத்துகிறது. உரச்செறிவூட்டப்பட்ட தண்ணீராகிறது. அசோலா உற்பத்தி குறையும் போது அந்தத் தண்ணீரை எடுத்து கீரை வளர்க்க பயன்படுத்தலாம்.

சுழற்சி முறை:
தண்ணீரை சசிக்கனப்படுத்தி பயன்படுத்துவதால், 10 – 12 சதவீத வளர்ச்சி அதிகரிக்கிறது. கீரை மட்டுமல்ல காய்கறி உற்பத்திக்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். காளான், அசோலா, கீரை அல்லது காய்கறி உற்பத்திக்கு ஒரு குறிப்பிட்ட தண்ணீரைக் கொண்டு சுழற்சி (Rotational) முறையில் பயன்படுத்தி தண்ணீரை சிக்கனப்படுத்தி சாதிக்கலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories