நெல்லில் அதிக மகசூல் பெற உயிர் உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றது .அந்தவகையில் நாம் இன்று அசோலாவின் முக்கியத்துவத்தை இங்கு காணலாம்.
அசோலா கம்மல் பாசி என்று அழைக்கப்படும். ஒவ்வொரு விவசாயின் தோட்டத்திலும் இருக்கவேண்டிய உயிராகும் .குறிப்பாக நெல் விளைச்சலுக்கு மிகச்சிறந்த உயிர் உரம் அசோலா. அசோலா பெரணி வகை தாவரம் ஆகும் .நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
அசோலாவின் இலை திசுக்களில் அனபீனா எனப்படும் நீலபச்சை பாசி கூட்டு வாழ்க்கை முறையில் செயல்பட்டு தழைச்சத்தை சேர்க்கின்றது.
சூரிய ஒளி படக்கூடிய நீர் அருகிலுள்ள நிலத்தை சமன்படுத்தி கொண்டு ஒரு சென்ட் பாத்திகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பாத்தியைச் சுற்றி 15 முதல் 20 சென்டி மீட்டர் உயரத்திற்கு வரப்பு எழுப்பி தண்ணீர் கசிவை கட்டுப்படுத்த களிமண் கொண்டு பூசவேண்டும். பின்னர் பாத்திகளில் 10 சென்டி மீட்டர் உயரத்திற்கு நீர்பாய்ச்சி 12 மணி நேரத்திற்கு விட்டு வைக்க வேண்டும் .பாத்தி ஒன்றுக்கு 10 கிலோ மாட்டுச் சாணத்தை 20 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம் .பாத்தி ஒன்றுக்கு 8 கிலோ அசோலாவை சீராக தூவ வேண்டும் .ஏழு நாட்கள் கழித்து பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் கடலை புண்ணாக்கு இடவேண்டும் .15 நாட்களுக்குப் பிறகு ஒரு சென்ட் பாத்தில் இருந்து 100 முதல் 150 கிலோ அசோலா மகசூலாகக் கிடைக்கும்.
அசோலாவை தனியே வளர்த்து விடும் போது நெற்பயிரில் ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் அசோலாவை இடலாம். இது நெல்வயலில் பச்சை போத்தியது பச்சைக் கொடியைப் போல் படர்ந்திருக்கும் .நெற்பயிரில் ஏற்படும் கலைகளும் கட்டுப்படும். மேலும் நெல்லில் கூடுதலான மகசூல் தரும். இதில் நெல் அறுவடை வரை அசோலாவை வயலில் வைத்திருக்கக்கூடாது.
நெல் சாகுபடியை பொறுத்தவரை மூன்று போகம் அசோலாவை தொடர்ந்து இடு பொருட்களாக பயன்படுத்தி வந்தால் அந்த வயலில் நல்ல விளைச்சல் கிடைப்பதுடன் மண்வளமும் பெருகிக்கொண்டே இருக்கும். அடுத்த போகத்தில் எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும் நல்ல விளைச்சல் கிடைக்கும். எனவே இந்த அற்புதமான உயிர் உரத்தை நெல் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். அசோலாவை நெல் வயலில் வளர்க்கும் போது நீர் ஆவியாவது குறைகிறது. அசோலா காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையைச் செய்கிறது.