பால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்க்க எளிய முறைகள்!

கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள் மிகுந்த அசோலாவை வளர்த்து, தீவனப்பற்றாக்குறை உள்ள காலங்களில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறலாம் என கால்நடைத்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

கால்நடைகளுக்கு நல்ல சத்துமிகுந்த தீவனங்களைக் கொடுப்பதன் மூலம் அதிகளவில் பால் பெறமுடியும். எனினும் கால்நடை வளர்ப்போர் அதிகளவில் எதிர்கொள்ளும் பிரச்சனை தீவனப்பற்றாக்குறையே.

குறிப்பாக, வறட்சி காலங்களில், தீவனப்பற்றாக்குறை ஏற்படும் போது, பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்..

இதற்கு தீர்வாக, அசோலா போன்ற தீவனங்களை, தாங்களாகவே உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம் என கால்நடைத்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

அலோசா
அசோலா என்பது பெரணி வகையை சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். அசோலாவில், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகம், மக்னீசியம், இரும்புச்சத்துகள் உள்ளன.

உற்பத்தி (Cultivation)
அசோலா உற்பத்தி செய்ய, ஒரு குழியை உருவாக்கி, சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பி, சீரான பள்ளமாக இருக்க வேண்டும்.

சில்பாலின் பாயின் மீது, 30 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி, புதிய சாணம், 2 கிலோ தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.பின்னர், 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை, தண்ணீரில் கலந்து குழியில் ஊற்றவும். தண்ணீரின் அளவு, 10 செ.மீ., உயரும் வரை, 6 முதல் 9 குடம் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். குடிநீரை மட்டும் பயன்படுத்தவும் என்றார்.

விதைகள்(Sowing)
இறுதியாக, 200-500 கிராம் சுத்தமான அசோலா விதைகளை குழியில் போட்டு, அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.

மகசூல் (Yeild)
விதைத்த மூன்று நாட்களில், எடை மூன்று மடங்காக பெருகும். 15 நாட்களில், பசுந்தீவனமாக பயன்படுத்த அசோலா தாவரம் தயாராகி விடும்.

அறுவடை (Harvesting)
நாளொன்றுக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை அறுவடை செய்யலாம்.

உரம் (Fertilizers)
நாள்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட்டு, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். பத்து நாட்களுக்கு ஒரு முறை, மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்றி, பதிலாக சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும்.

பால்உற்பத்தி (Milk Production)
ஒரு கிலோ புண்ணாக்கு ஒரு கிலோ அசோலாவிற்கு சமமாகும். இத்தீவனத்தை அளிப்பதால், பால் உற்பத்தி 15-20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே அசோலாவைக் கோழி, முயல், வாத்து மற்றும் பால் உற்பத்தி மாடு, எருமைகளுக்கும் தீவனமாக அளிக்கலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories