வகை வகையாக உயிரினங்கள் ஆனால், ஒரே தீவனம்…

கோழித்தீவனமாக அசோலா: அசோலா எனப்படும் பெரணி வகை நீர்த்தாவரம் கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் 20 சதவீதம் வரை சேர்த்தால் குஞ்சுகள் நன்கு வளர்ந்து நல்ல எடையுடன் காணப்படும்.

கோழிகளுக்கு அசோலாவை உணவாக இடுகின்றபொழுது மஞ்சள்கருவானது நல்ல தேர்ச்சியுடன் உருவாகிறது. மேலும் கோழிகளில் நோய் எதிர்ப்புத்தன்மை இருப்பதாகவும் திகழ்கிறது.

மாட்டுத்தீவனமாக அசோலா:

அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாகவோ, பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். அசோலாவில் அதிக புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும் உள்ளது. மேலும் இதில் நார்ப்பொருட்கள் குறைவு. கால்நடைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் அசோலா கொண்டுள்ளது.

அசோலாவை உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றிகள் அசோலாவை நன்றாக உட்கொண்டு அதிக எடையுடன் திகழ்கின்றன. மேலும் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கிறது. கால்நடைகளுக்கு அசோலாவை கோதுமை வைக்கோலுடன் சேர்த்து அளித்தால் கால்நடைகளின் எடையும் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

மீன் வளர்ச்சிக்கு அசோலா:

மீன்கள் மற்ற தீவனத் தாவரங்களைவிட அசோலாவை விரும்பி உண்கின்றன. மீன்கள் வளரும் குட்டைகளில் ஒரு ஓரத்தில் மிதக்கும் மூங்கில் கழிவுகளைப்போட்டு அசோலாவை வளர்க்க வேண்டும்.

மீன்கள் தேவைப்படும் சமயத்தில் வந்து அசோலாவை உண்டுவிட்டு சென்றுவிடும். மேலும் அசோலாவை காயவைத்து பொடி செய்து தண்ணீரில் தெளித்துவிடலாம்.

நெல் வயல்களில் அசோலாவும் மீன் வளர்த்தலும்:

தண்ணீர் ஓரளவு தேங்கி நிற்கும் நெல் வயல்களில் மீன் வளர்த்து அதிக லாபம் பெறலாம். அசோலாவை மீன் வளர்க்கும் வயலில் வளர்ப்பதால் அசோலா மீன்களுக்கு உணவாகப் பயன்படும். நெல் வயல்களில் வரப்பு ஓரத்தில் 1.5 மீட்டர் அளவுக்கு 0.50 மீட்டர் ஆழத்திற்கு வயலின் இரண்டு வரப்பு ஓரங்களிலும் பள்ளம் செய்து மற்ற இடங்களில் வயலைத் தயாரித்து நடவு செய்ய வேண்டும்.

வயலில் நெற்பயிர் வேர் பிடித்தபிறகு தண்ணீர் 7.5 செ.மீ. முதல் 10 செ.மீ. அளவு தேங்கும் அளவுக்கு பராமரிக்க வேண்டும். நடவு நட்ட 7வது நாள் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ அளவு அசோலாவை தூவிவிட வேண்டும். அசோலா வளர்ந்து பெருக்கமடையும். நடவு நட்ட 10 நாட்களில் ஏக்கருக்கு 2500-3000 மீன் குஞ்சுகள் வயலில் விடவேண்டு.

அசோலாவைத் தனியாக பொடி செய்து தூவிவிடுவதன் மூலம் மீன்களுக்கு உணவாகப் பயன்படும். அசோலாவை பசுமையாக எடுத்து மாட்டுச்சாணத்துடன் 1:1 என்ற அளவில் சேர்த்து இரண்டு வாரம் மக்கவைத்து நெல்வயலில் இடுவதன் மூலம் மீன்களுக்கு உணவாகப் பயன்படும்.

100 கிலோ பசுமையான அசோலாவை 100 கிலோ பச்சைச் சாணம், 50 கிராம் சூப்பர் பாஸ்பேட்டுடன் கலந்து ஒன்று சேர்த்து குவியலாக வைத்து 2 வாரத்திற்கு மக்கச்செய்து பிறகு அதில் 500 மி.கி. நீலப்பச்சைப்பாசி கலவையும் சேர்த்து மீன்களுக்கு உணவாக நெல்வயலில் இடவேண்டும்.

இவ்வாறு மீன், அசோலா இரண்டையும் வளர்ப்பதன் மூலம் மீன்கள் அசோலாவை உணவாக எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இதனால் மீன்களின் கழிவுப் பொருட்களும் நெற்பயிருக்கு பயன்படுகின்றன.

இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 150, 200 மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இதன்மூலம் அதிக வருமானம் பெறலாம்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories