“அடர விதைத்து சிதற பிடுங்கு”

அடர்த்தியாக விதைகளை விதைத்து மீண்டும் விதை தேவைக்காகவும் ஒரு சில காய்கறி செடிகளில் நல்ல மகசூலுக்காகவும் கலைத்து விடுவது வழக்கம் .இதனால் ஏற்படும் நன்மை பற்றி இங்கு காணலாம்.

திருவாரூர் ஊரை சேர்ந்தவர் குரு. அவர் விடுமுறை காலங்களில் தாத்தா செய்யும் விவசாயத்தின் மீது ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் .அத்துடன் அவருக்கும் சில உதவிகளை செய்து வந்தார். தாத்தாவிடம் கீரையை விதிப்பது குறித்து கேட்டு கொண்டே இருந்தது.

தாத்தா கொத்தமல்லியை விதைக்க வைத்திருந்தார் .அவரைப் பார்த்து ,

குரு ஏன் தாத்தா உடைந்த கொத்தமல்லிதழை வைத்திருக்கிறார் நல்ல தரமான விதைகளை விதைத்தால் தானே செடிகள் நன்கு வளரும் என்றான்.

மற்றவர்களைவிட வித்தியாசமாக விதைப்பது தான் கொத்தமல்லி. இந்த விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும் .உடைக்காமல் முழு விதைகளை விதைத்தால் முளைக்காது என்றார் தாத்தா.

கீரைகளை அறுவடை செய்து விட்டால் மீண்டும் நமக்கு எ ப்பொழுது விதை கிடைக்கும் தாத்தா என்று கேட்டார்.

கொத்தமல்லி விதைகளை “அடர விதைத்து சிதற பிடுங்கு” என்று சொன்னார்.

அதாவது கொத்தமல்லியை விதைத்த 30வது நாளில் கீரைகள் அறுவடை செய்யலாம். அதுவும் கீரைகளை அறுவடை செய்யும்போது ஒரே பகுதியில் அறுவடை செய்யாமல் அதிகமாக வளர்ந்த இடத்தில் உள்ள கீரைகளை குறிப்பிட்ட இடைவெளியில் கலைத்துவிட வேண்டும் .இதனால்தான் நமது முன்னோர்கள் “அடர விதைத்து சிதற பிடுங்கு” என் என அறிவுறுத்தி உள்ளார்கள்.

அதற்கு குரு ஏ ன் தாத்தாஅவ்வாறு செய்ய வேண்டும் ,இதனால் என்ன பயன் என்று கேட்டான்.

இவ்வாறு அடர்த்தியான பகுதியிலுள்ள கீரைகளை கலைத்து பிடுங்கி எடுத்து விட்டால் மீதமுள்ள கீரைகள் நன்கு, அதிக சத்துக்களுடன் செழித்து வளரும் .இதனாலும் நாம் நல்ல தரமான கொத்தமல்லி விதைகளை அறுவடை செய்யலாம் என்றார்.

அதை எப்பொழுது அறுவடை செய்யலாம் என்று கேட்டார்.

விதைத்த 90 முதல் 110 நாட்களில் விதைகளை அறுவடை செய்யலாம். காய்கள் நன்கு பழுத்தவுடன் காயின் நிறம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும். இந்தக் கீரையை மட்டுமல்ல புளிச்சக்கீரை மற்றும் அனைத்து காய்கறி விதைகளைவிதைக்கும் போது
இரண்டு மூன்று விதைகளை விதைத்து ,அதில் நன்கு கீரைகள் வளர்ந்த செடிகளை விட்டு விட்டு சுமாரான செடிகளை பிடுங்கி விட வேண்டும் .இதனால் நன்கு வளரும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories