விவசாயத்தில் சில நுணுக்கங்களை பின்பற்றினால் அதிக லாபம் பெற முடியும் .அந்த வகையில் சில முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.
இயற்க்கை விவசாயம் தான் மிகச் சிறந்தது. ரசாயன உரத்திற்கு இணையான இயற்கை உரம் பயன்படுத்தியும் மகசூல் எளிதாக பெறலாம் .அதாவது யூரியா வுக்கு மாற்றாக மாட்டுக் கோமியம் டிஏபி க்கு பதிலாக ஜீவாமிர்தம் அமிர்த கரைசல் பூச்சிவிரட்டி வேப்ப எண்ணெய் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டி பதில் அடுப்புச் சாம்பல் மகரந்த சேர்க்கைக்கு தேனி மற்றும் வண்ணத்துப்பூச்சி பார்த்தீனியா விஷச் செடியை அழிக்க சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் கல் உப்பு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
அவரை செடியில் அஸ்வினி பூச்சித் தாக்குதல் இருந்தால் அடுப்புச் சாம்பலை செடியின் மேல் தூவினால் சரியாகிவிடும்.
விவசாய நிலங்களில் கோரை வரும் பகுதிகளில் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை சோளம் அல்லது கம்பு விதை விதைக்கும் போது அங்கு கோரை வளராது.
கம்பு மற்றும் சோளம் விதைத்த பூமியில் வாழை நடவு செய்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும்
மஞ்சளையும் வேப்ப எண்ணெயையும் கலந்து அதனுடன் விதைகளைக் கலந்து வைப்பதால் இரண்டு முதல் மூன்று வருடத்திற்கு விதைகளை எந்தப் பூச்சியும் அரிக்காது.
மாடுகளுக்கு வாரம் ஒரு முறை ஒரு கையளவு வேப்பிலையும் அகத்திக்கீரையும் அளிக்க வேண்டும் .இதனால் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தோட்டத்தில் சோளம் விளைந்த பகுதியில் மஞ்சள் நடவு செய்தால் மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருக்கும்.