இன்றைய விவசாயி பழமொழி!

“அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி”!

சில சமயங்களில் எவ்வளவு உழைத்தாலும் பலன் கிடைப்பதில்லை அந்த வகையில் விவசாயத்தில் பலன் சரிவர கிடைக்காத பட்சத்தில் அந்த கவலையை எடுத்துரைக்கும் வகையில் உள்ள இந்த பழமொழியை இங்கு பார்ப்போம்.

குருவுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம் அவர் நெல் நடவு செய்பவர் அவர் வழக்கம்போல நெல் நடவு செய்து இருந்தார் அவரது மகள் சென்னையிலிருந்து தனது சொந்த ஊர் நாகப்பட்டினத்திற்கு வந்திருந்தார் அப்பொழுது அவரது என்னப்பா விவசாயம் எப்படி போகின்றது என்று கேட்டால் அதற்கு அவர் ” அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி” யாக போகின்றது என்றார்.

அதைக் கேட்ட அவரது மகள் என்னப்பா சொல்கிறீர்கள் என்றால். அதற்கு அவளுடைய தந்தை வழக்கம் போலத்தான் இந்த ஆண்டும் விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை. நெல் நடவிற்கு செலவு செய்த பணத்திற்கு நெல் மூட்டைகளாக வாங்கி இருந்தால் உழைப்பு மிச்சமாயிருக்கும் இருக்கும்.

அதற்கு அவர் மகள் சரிஇனி விவசாயம் செய்யாமல் அதற்கு செலவு செய்யும் பணத்திற்கு நெல் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

அதற்கு அவர் விவசாயம் செய்து விட்டு ஒரு ஆண்டு கூட வயலை சும்மா விட மனம் வராது.. விவசாயிகளின் நோக்கம் லாபம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தவறாமல் விவசாயத்தை செய்ய வேண்டும் என்பதுதான் என்றார்.

சரி அப்பா நீங்கள் விவசாயத்தையே தொடருங்கள் உங்கள் மனம் அப்பொழுதுதான் நிறைவாக இருக்கும். இருப்பினும் மேலும் சில தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு விவசாயத்தை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் உங்களுக்கு பெறமுடியும்.

நீ சொல்வது சரிதான் விவசாயம் செய்வதால் மனமகிழ்ச்சி எனக்கு எப்போது கிடைக்கும் என்னைப்போல உள்ள விவசாயிகளுக்குகாக தான் “அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி” என்ற பழமொழியை முன்னோர்கள் கூறியுள்ளனர் என்றார்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories