“கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி”
விவசாயத்திற்கு நிலம் மிக அவசியமான ஒன்று. அதுவும் வளமான நிலம் மிக அவசியம் தேவை. விவசாயம் செய்பவர்களின் நிலம் வளம் அற்றதாக இருந்தாலும் அதை எப்படி வளமாக்குவது என்பதை குறித்து இன்றைய வேளாண் பழமொழி விளக்கத்தினை காணலாம்
அறிவாளன் என்ற விவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலமும் வளமானது என்று சொல்ல முடியாது…. அவர் அந்த வளமில்லாத நிலத்திலும் எதைத்தான் நடவு செய்வது என யோசித்துக் கொண்டிருந்தார். அவர் அதைப்பற்றி அருகிலுள்ள அனுபவம் நிறைந்த விவசாயிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
ஒருநாள் காலை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அவரது நண்பன் வீட்டிற்கு விதை நெல்லை வாங்க அனுபவ விவசாயி ஒருவர் வந்திருந்தார்.அவர் எனது நிலம் வளம் அற்றதாக உள்ளது. அதில் நான் மர வகைகளை நடலாம் என்றாலும் வழியில்லை என்றார்
அதைக் கேட்ட அனுபவ விவசாயி என்ன சொல்றீங்க…. உங்க நிலத்தை பார்ப்போம் என்றவாறு அவருடன் சென்றார்.
அவர் நிலத்தை பார்த்து எந்த நிலத்திலும் வளர்க்கலாமே… “கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி”
போதுமே என்றார் .அதைக் கேட்ட அறிவாளன் என்ன சொல்றீங்கள் …அது எப்படி என்றார்.
அதற்கு அந்த அனுபவ விவசாய நிலம் வளமற்றதாக இருந்தாலும் அந்த நிலத்தில் வன்னி மரம் வளரும் இயல்புடையது .மேலும் வளம் இல்லாத நிலத்தில் வன்னி மரங்களை நடவு செய்தால் நிலம் வளமாகும். என்பதைதான் “கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி” என்ற பழமொழி விளக்குகின்றது.
இவ்வாறு வளர்ப்பதால் நிலம் வளமானதாக மாறும் .அந்த நிலத்தில் காலப்போக்கில் விவசாயம் செய்யலாம் என்றார்.