இன்றைய விவசாய பழமொழி!

 

“ அஸ்வினி பூச்சி அவரைக்கு ஆகாது”

விவசாயத்தைப் பொறுத்தவரையில் ஒரு சில செடிகளுக்கு ஒரு சில பூச்சிகள் எதிரியாக இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகள் அந்தச் செடியின் முக்கிய பொருளாதார நிலையினை சேதப்படுத்தும். இதனால் நஷ்டம் மட்டுமே மிஞ்சும் .அந்த வகையில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளின் சேதத்தை பற்றி இங்கு காணலாம்.

கமலேஷ் என்பவர் ஒரு சிறந்த விவசாயி. அவர் ஒருமுறை அனைத்து வகை காய்கறிகளையும் பயிர் செய்திருந்தார் அவரது வயலுக்கு அருகில் உள்ள விவசாயி ரகு என்பவரது நிலத்தில் ஒரு சில கொடிவகைக் காய்கறிகளையும் பயிர் செய்திருந்தார். அதில் அவரையில் எப்பொழுதுமே அவரால் மகசூல் எடுக்க முடியவில்லை.

இதனால் கமலேஷ் இடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என சென்றிருந்தார்.

கமலேஷ் இடம் அவரது வயலின் நிலையையும் தன்னுடைய அவரையில் மகசூல் இழப்பை பற்றிக் கூறினார். அதற்கு கமலேஷ் “அசுவினி பூச்சி அவரைக்கு ஆகாது”என்று கூறியவாறு அவரையில் அஷ்வினி தாக்கினால் செடி முழுவதும் பாதிக்கப்படும் இதனால் தரமான காய்களை எப்பொழுதும் பார்க்க முடியாது இது பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

அதைக்கேட்ட ரகு ஆமாம் என்னுடைய வயலில் உள்ள அவரையில் அஸ்வினி அதிகம் உள்ளது .நீங்கள் எப்படி உங்கள் அவரை செடியை பராமரிக்கிறீர்கள் எனக்கு கொஞ்சம் கூறுங்கள் என்றார்

அதற்கு கமலேஷ் அஷ்வினி என்றால் என்ன என்பதை முதலில் கூறுகிறேன் கேளுங்கள்.. இந்த பூச்சி செடிகளின் சாறை உறிஞ்சும் தன்மை கொண்டதாகும். கருமை நிறத்தில் செடிகளின் மீதும் சர்க்கரை போன்ற திரவத்தை வெளியேற்றும் தன்மை கொண்டிருக்கும் .இந்த பூச்சி தாக்கினால் மொச்சை வைரஸ் நோய் பரவுவதற்கு சாதகமாக அமைகிறது. மேலும் பாதிக்கப்பட்ட செடிகளின் இலை,காயிகள் சுருங்கியும் காணப்படும்.

அவரையில் வரும் அஸ்வினி பூச்சி தாக்குதலை தடுக்க ஆரம்பத்திலேயே கண்டிப்பாக வாரம் இருமுறை கற்பூர கரைசல் தெளிக்க வேண்டும். சாம்பல் இருந்தால் அதையும் தூவி விடலாம். வேப்பம் புண்ணாக்கை ஒரு மெல்லிய துணியில் கட்டி நீரில் பாதி நாள் ஊற வைத்து அந்த சாற்றை எடுத்து செடிகளுக்கு காய்களிலும் பிஞ்சுகளிலும் நன்றாக படும்படி தெளித்து விடலாம். 100 மில்லி வேப்ப எண்ணெய் 10 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலமாகவும் அஸ்வினி தாக்குதலை முழுவதுமாக தடுக்கலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories