விவசாயத்திற்கு விதை இன்றியமையாததாகும். அத்தகைய விதைகள் எப்படி இருந்தால் முளைக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
கோபால் அவர்களுக்கு சொந்த ஊர் சிவகங்கை. அவரதுநிலத்தில் வருடம் தவறாமல் விவசாயம் செய்வது வழக்கம். அவர் அந்த ஆண்டு உளுந்து விதைக்கலாம் என்று நினைத்திருந்தார். அவரது மகள் கோகிலா அப்பா நாம் இந்த ஆண்டு உளுந்து விதைத்த விதை எங்கு வாங்குவீர்கள் என்று கேட்டாள்.
அதற்கு அவளது தந்தையும் நமது வீட்டில் உள்ள விதையை முளைக்க வைத்து முளைக்க வில்லை என்றால் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி விதை வாங்கி தான் விதைக்க வேண்டும் என்றார்.
ஏனப்பா நமது வீட்டில் உள்ள விதை முளைக்காதா?
அதற்காக நாம் வீட்டில் உள்ள விதையை ஒருவித அந்துப்பூச்சி தாக்கியது போல் உள்ளது.”அந்து அழித்த வித்து என்றும் முளையாது ”
என்று நமது முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏன் இவ்வாறு சொல்லி உள்ளார்கள் எனக்கு புரியும்படி சொல்லுங்கள் என்றாள் கோகிலா.
அதற்கு அவளது தந்தையை பூச்சிகள் தாக்கிய அல்லது தின்ற விதைகள் முளைக்கும் தன்மையை இழந்து விடும் எனவே அதை விதைத்தால் பலன் இ ல்லை என்பதனையே “அந்து அழித்த வித்து என்றும் முளையாது ”
என்ற பழமொழி உணர்த்துகிறது என்று தெளிவாகக் கூறினார்.
சரி விதைகளை நாம் இந்த பிரச்சனைகளிலிருந்து எப்படி பாதுகாக்கலாம் என்று கேட்டாள் கோகிலா.
அதற்கு அவளது தந்தையை சேமிக்க வேண்டியது முளைப்புத் திறன் மற்றும் வீரியம் மிக்கவையாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாத விதைகளாக இருத்தல் வேண்டும் நன்கு சுத்தம் செய்யப்பட்ட கல் தூசு நீக்கி விதைகளை புதிய கோணிப்பைகளில் சேமிக்க வேண்டும்.
விதை சேமித்து வைக்கும் சுற்றுப்புறம் பூச்சிகள் மற்றும் எலிகள் நடமாட்டம் இல்லாத இடமாக இருக்க வேண்டும். அதோடு சேமிக்கப்படும் இடமானது தட்ப வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ள இடமாக இருக்கவேண்டும்.
தடிமனான மரக்கட்டைகளை வைத்து அதன் மேல் விதை மூட்டைகளை குறுக்கு வசமாக அடுக்கி வைப்பதால் விதை மூட்டைகளை இடையில் நல்ல காற்றோட்டம் இருக்கும் இதனால் பூச்சிகள் தாக்காது.
விதை மூட்டைகளை அடுக்கும் போது அவற்றை ஆறு முதல் எட்டு மூ ட்டைகளுக்கு மேல் ஒரே அடுக்கில் அடுக்க கூடாது விதையின் முளைப்புத் திறனை அதிகரிக்க அடுக்கி வைக்கப்பட்ட மூ ட்டைகளை பிரித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் வேறு இடத்தில் எடுக்கலாம்.
நன்கு உலர்ந்த விதைகளை காய்ந்த ஆலமர இலைகளை பொடியாக்கி தானியங்களுடன் கலந்து எலுமிச்சை சாற்றினை தானியங்களுடன் கலந்து நன்கு சூரிய ஒளியில் உலர வைத்தும் பீநாரிசங்கு இலைச்சாறுடன் தானியத்தை கலந்து உல ரவைக்கும் மற்றும் வேம்பு ,எ ருக்கு ,நொச்சி செடிகள் இலைகளுடன் தானியங்களை பாலத்தீ ன் உட்பட சாக்குப் பைகளில் சேமித்தால் விதையின் முளைப்புத்திறன் அதிகமாக பாதுகாக்கப்படும்.
எனவே தேர்வு செய்யப்பட்ட சிறிய தொழில்நுட்பங்கள் மூலம் நல்ல விதைகளை உற்பத்தி செய்து பயன்படுத்தினால் அதிக லாபம் பெறலாம்.