இன்றைய விவசாய பழமொழி!

“தும்பி பறந்தால் தூரத்தில் மழை”

விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக தண்ணீரை கொடுக்கும் மழையினை நமது முன்னோர்கள் பல்வேறு அடையாளங்களை வைத்து துல்லியமாக கணித்தனர் அவற்றில் ஒன்று இதுதான்!

பிரகாஷ் என்பவர்க்கு சிறிதளவு நிலம் இருந்து. அந்த நிலத்தில் மானாவாரியாக உளுந்து விதைக்கலாம் என்று நினைத்தார். அவரின் மகள் அப்பா ஈரம் உள்ள நிலத்தில் உளுந்து விதைக்க வேண்டும் என்கிறீர்களே மழை வந்தால் செடியில் அழுகல் ஏற்படும் என்றாள் . அதற்கு அவனது தந்தை மழை வரப்போகிறதை நான் கணித்து தான் இதை செய்கிறேன் என்றனர்.

உடனே அவரது மகள் அப்பா மழை வருவது எப்படி கணக்கிடுகிறார்கள் என்று கேட்டாள் அதற்கு அவர் மழை வருவதை நமது முன்னோர்கள் பல்வேறு அடையாளங்களை வைத்து கணித்தனர் .அந்த வகையில் தான் நானும் சொல்கிறேன் என்றார் அதற்கு அவள் எப்படியப்பா எனக்கு அதை சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டாள்.

உடனே அதற்கு அவனது தந்தை ” தும்பி பறந்தால் தூரத்தில் மழை” என்ற பழமொழி சொன்னார். உடனே அவரது மகள் என்ன சொல்கிறீர்கள் அப்பா என்றால்.

புரியும்படியும் சொல்கிறேன் கேள் என்றார் தும்பி என்றால் தட்டான். அந்த தட்டான் உயரமாக பறந்தால் தூரமாக மழை பெய்யும் என்றும்,தட்டான் தாழ்வான உயரத்தில் பறந்தால் அருகில் மழை பெய்யும் என்றும் அந்தப் பழமொழியின் கூறப்படுகிறது.

நான் பயிரிடுவதற்கு ஏற்றார்போல து ம்பி அதிக உயரத்தில் பறக்கின்றது .அதனால் தான் இப்போதைக்கு மழை வராது.சிறிது நாட்களுக்குப் பிறகுதான் மழை வரும் என்று கூறினார்.

உடனே அவரது மகள் இது எப்படி சாத்தியமாகும் என்றாள் . உடனே அவர் இதெல்லாம் அனுபவ உண்மைதான்.இவைகளால் தான் அந்த காலத்தில் மழை வருவதை கணித்து துல்லியமாக சொல்கிறார்கள் நமது முன்னோர்கள்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories