இன்றைய விவசாய பழமொழி!

“புழுவை தின்ன புள்ளினம் உதவும்”

விவசாயிகளுக்கு நண்பனாக எப்படி மண்புழு உதவுகிறதோ அதே போன்று தான் சில எதிரிகளும் உண்டு. பயிர்களை சேதப்படுத்தும் புழு மற்றும் பூச்சிகள் இவ்வாறு பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் புழுவைப் பற்றி இங்கு காணலாம்

ரகுவரனின் சொந்த ஊர் தஞ்சை. அவர் நிலத்தில் நெல் நடவு செய்து இருந்தார். அவர் வயலைச் சுற்றிலும் T வடிவ குச்சிகளை நடவு செய்து இருந்தார். அதைக்கண்ட அவரது பேரன். என்ன தாத்தா வயலை சுற்றி இவ்வாறு T வடிவ குச்சிகளை நடவு செய்து உள்ளீர்கள் என்று கேட்டான் .இதனால் என்ன பயன் என்று கேட்டான்

அதற்கு ரகுவரன் சிரித்தபடி “புழுவை தின்ன புள்ளினம் உதவும்” என்றார்.

அதைக்கேட்ட பேரன் என்ன சொல்றீங்க தாத்தா எனக்கு புரியவில்லை என்று கேட்டான்

அதற்கு தாத்தா இந்த குச்சிகளின் மீது வந்து உட்காரும் பறவைகள் பயிர்களை தாக்கும் புழுக்களை தனது உணவாக்கி அழித்துவிடும். இதனால் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சேதம் தடுக்கப்படும் .இதைதான் “புழுவை தின்ன புள்ளினம் உதவும்” என்கிறார். இந்த பழமொழியில் புள் என்பது பறவையை குறிப்பிடுகிறது.

வயலின் இவ்வாறு T வடிவ குச்சிகள் வைப்பதால் பறவைகள் ,குருவிகள் ,கோட்டான்,மைனா போன்றவை அதன் மீது அமர்ந்து குட்டைக் கொம்பு வெட்டுக்கிளி களையும் ,இலை உண்ணும் புழுக்களையும், பறக்கும் தாய் பூச்சிகளை பிடித்து உண்டு அழிக்கும். இது இயற்கை வேளாண்மை ஆகும் என்றார்

வேறு ஏதாவது வரைமுறை உள்ளதா என்று கேட்டான் அவரது பேரன். அதற்கு தாத்தா இன்னும் சில செயல்களினால் புழுக்களின் மற்ற நிலையான பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இந்த வகையில் நெல்லில் தாய் அந்துப் பூச்சிகள் வாயிலில் விளக்குப் பொறிகளை வைத்து கவர்ந்து அழிக்கலாம்.

மேலும் 5 அடி நீளம் 1.5 அடி அகலம் கொண்ட மஞ்சள் நிற அட்டையில் விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவி ஒட்டும் பொறிகளை தயாரிக்கலாம் .இவற்றை ஏக்கருக்கு பத்து என்ற எண்ணிக்கையில் 5 அல்லது 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைக்கலாம் என்றார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories