வணக்கம், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் உழைப்பால், மறைந்த நெல் ரகங்கள் பாதுகாவலர் நெல் ஜெயராமன் அய்யா அவர்களின் முயற்சியால் பாரம்பரிய நெல் ரகங்களை பெரும்பான்மை விவசாயிகள் செய்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பாரம்பரிய நெல்/அரிசி பயன்பாடு மிகவும் குறைவு என்பதால் விற்பனை வாய்ப்பு குறைவாகவே உள்ளது.இதனால் நிறைய பேர் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதை குறைத்து கொள்ள முற்படுகிறார்கள்.
🌾 இப்படி விற்பனை வாய்ப்பு குறைவுக்கு தீர்வு..,
🌾 தினமும் ஒரு ரக அரிசியை உணவிற்கு பயன்படுத்துவதை விட 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு ரக அரிசி என வாரம் 4 /5 வகை அரிசி ரகங்களை பயன்படுத்துமாறு அறிவுரை கூறவும்.
🌾 அடுத்து சிற்றுண்டி உணவு மாவு தயாரிப்பில் ஒரே ரக அரிசியை போடாமல் 4/5 ரக அரிசியை கலந்து(100 கிராம் அளவில்) பயன்படுத்தலாம்.
🌾அடுத்து சிவப்பு நிற அரிசி தான் என்பதை விட மிதமான பட்டை தீட்டிய அரிசியை உணவிற்கும் / சிற்றுண்டிக்கும் பயன்படுத்தலாம்.
🌾 அடுத்து இதனால் அனைத்து ரக நெல் / அரிசி பயன்பாடு மிகவும் அதிகரிக்கும்.
🌾 இதனால் இயற்கை / பாரம்பரிய நெல் / அரிசி உற்பத்தியில் இருந்து விவசாயிகள் வெளியேறுவது குறையும்.
🌾 இதனால் பாரம்பரிய நெல் / அரிசி விற்பனை அதிகரிக்கும்.
🌾 இப்படி இந்த நிலை மாறும்போது தான் ஒவ்வொரு பாராம்பரிய நெல் ரகங்களில் அதிக ரகங்கள் பயிர் செய்யப் படும். அதனால் அந்த ரகங்கள் அழியாமல் பாதுகாக்கப்படும்.
🌾 பி. கு… இல்லையேல் அடுத்த ஆண்டு நான் இந்த 90 வகை நெல் சாகுபடி செய்வேன் என்பது என்ன நிச்சயம்…!
🌾 இவண் கே. சுந்தரேசன் ஆசிரியர் ஜெயங்கொண்டம்
