அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம் தான். அதன் இலைகள், காய்கள் மற்றும் பழங்கள் என அனைத்தும் நமக்கு பயன்படக்கூடியது தான் ,ஆனால் நமக்குத் தெரியாத ஒரு செய்தியும் இதில் இருக்கிறது , அதுதான் வாழைப்பழத் தோல் ,அதில் என்ன இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.
வாழைப்பழத் தோலை உரமாக மாற்றி பயன்படுத்தலாம்.
வாழைப்பழம் எப்படி நமக்கு உடலுக்கு வலு சேர்க்க உதவுகிறது. அதேபோலதான் வாழைப்பழத்தோல் பயிர்களுக்கு வலு சேர்க்க உதவுகிறது.
மூன்று வழிகளில் வாழைப்பழத்தின் தோலை உரமாக மாற்றி பயன்படுத்தலாம். வாழைப்பழத் தோலை சிறு துண்டுகளாக வெட்டி மற்றும் குப்பையுடன் சேர்த்து வைக்க வேண்டும். இது மட்கி நல்ல உரமாக மாறிவிடும். அதனை தோட்டத்துக்கு உரமாக இடலாம் அல்லது நேரடியாகவோ மண்ணில் கலக்கலாம் .சிறிது நாட்களில் மங்கிவிடும்.
ஒரு கலனில் சூடான நீரை பாதியளவு எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் வாழைப்பழத் தோலை சிறிது சிறிதாக வெட்டி அதனுடன் சேர்க்கவேண்டும். இந்த நீரை ஒரு வார காலத்திற்கு நன்கு நொதிக்க விட வேண்டும். ஒரு வாரத்திற்குப் பிறகு நொதித்த இந்த கரைசலை வடிகட்டி பயிருக்குத் தெளிக்கலாம்.
உங்களுக்கு விரைவாக உரம் கிடைக்க வேண்டுமென்றால் ,சுடு தண்ணீரில் வாழைப்பழத் தோலை உரித்து பயன்படுத்தவும் இது உடனடியாக தீர்வு ஆகும்.