“உழவு பகையானால் எருவினால் தீராது!”

 

“உழவு பகையானால் எருவினால் தீராது!”

விவசாயத்திற்கு மிக முக்கியமான முதல் வேலை என்றால் அது உழவுதான். அத்தகைய உழவின் சிறப்பை வள்ளுவர் முதல் அனைவரும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளனர் . அத்தகைய விவசாயத்தின் சிறப்பு முக்கிய சூழலின் முக்கியத்துவம் பற்றி இங்கு காணலாம்.

அன்பு மற்றும் ஆதீஷ் இருவரும் ஒரே வகுப்பு படிக்கிறார்கள். அவர்கள் பள்ளியில் வேளாண்மை பாடத்தில் இருந்து உழவு பற்றிய கட்டுரை எழுதி வரச் சொன்னார்கள். அதற்கு அவர்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு தாத்தாவைப் பார்த்து தான் முழு தகவலையும் பெற முடியும் என இருவரும் தாத்தாவை சந்தித்தார்கள்.

அவர்களைக் கண்ட தாத்தா அன்பு மற்றும் ஆதீஷ் இருவரும் ஒன்றாக வந்துள்ளீர்கள் என்றார் அதற்கு அவர்கள் தாங்கள் வந்ததற்கான காரணத்தை கூறினார்கள்.

உடனே தாத்தா உழவு பற்றி தானே தாராளமாக சொல்லிக் கொடுக்கிறேன் கேளுங்கள் என்றார்.

விவசாயத்தில் உழவு தான் ஒரு மிக முக்கியமான செயல் .அந்தக் காலங்களில் உழ வுகளை கால்நடைகளை கொண்டு செல்வார்கள் .தற்போது டிராக்டர் மூலம் செய்கிறார்கள் .இந்த உழ வு பணியையே செய்தால்தான் நிலம் வளமாகும் என்று சொல்லியவாறு உழவு பகையானால் எருவினால் தீராது! என்ற பழமொழி கூறினார்

அதைக்கேட்ட இருவரும் என்னதான் சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

விவசாயத்திற்கு வளம் நாம் உரம் என்று நினைக்கிறோம் .உண்மையில் உழவு செய்த நிலத்தில் இடப்படும் உரம் தான் பயிர்களுக்கு சென்றடையும். இல்லையேல் கலைகள் தான் அதிகம் வளரும்.

இதைத்தான் “உழவு பகையானால் எருவினால் தீராது!”
என்ற பழமொழி உணர்த்துகிறது. விவசாயத்தின் முக்கிய பணியான இந்த உழவு இல்லை என்றால் எந்த விவசாயம் செய்தும் எந்த பலனும் கிடைக்காது. நிலத்திற்குஎவ்வளவு எரு போட்டாலும் நன்கு உழவு செய்ய வில்லை என்றால் அந்த நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்காது என்று கூறினார் தாத்தா.

உழ வினால் மற்ற ஏதாவது பயன் உள்ளதா என்று கேட்டான்.

உழவு செய்வதால் பல நன்மைகள் நிலத்திற்கு உள்ளது. உழவுக்கருவிகளையும் , இயந்திரங்களையும் கொண்டு வந்து மண்ணை விதை முளைப்பதற்கு பயிர் விளைச்சலுக்கு ஏற்ற படி பக்குவப்படுத்தி ஆயத்தப்படுத்தி வந்தால் களைகள் பயிர் கட்டைகள் போன்றவை இருப்பின் மண்ணுக்குள் மூடப்பட்டு மட்க வைக்கிறது இதனால் நிலம் வளமாகும் என்றார்.

அதை ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு தாத்தா நிலத்தில் சிறந்த விதைப்புக்கு, முளைப்புக்கும் ,ஏற்றவாறு மண்ணைப் பண்படுத்தவும், பயிர் விளைச்சலுக்கு களையை கட்டுப்படுத்தவும் மழைநீரை நிலத்துக்குள் சேர்க்கவும், மண்ணில் ஈடுபடும்எரு மற்றும் சத்துக்களை மண்ணில் நன்கு கலக்க செய்யவும்,கட்டாயம் நிலத்தை உழவு செய்யவேண்டும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories