“ஐப்பசி அடை மழை கார்த்திகை கனமழை” இந்த பழமொழியின் விளக்கம் என்ன?

மழை இல்லாமல் பயிர் இல்லை என்பதற்கு ஏற்ப மழை பெய்யாவிட்டால் விவசாயம் இல்லை இவ்வாறு மழை பெய்வதை அந்த காலத்தில் பழமொழியாக வெளிப்படுத்தியுள்ளனர் சிறப்பினை எடுத்துரைக்கும் அதன் விளக்கத்தையும் பார்க்கலாம்.

முந்தைய காலம் போல மழை இல்லை என்ற கவலை அடிக்கடி கபிலருக்கு இருந்துவந்தது அதைப் போக்கும் வகையில் மழை பெய்தது இதனால் மிகுந்த சந்தோஷம்…

அவரது பேரன் நிரூபன் அவரிடம் தாத்தா பயங்கரமாக மழை பெய்கிறது நான் மழையில் விளையாடி ரொம்ப நாளாச்சு நான் விளையாடட்டும் ஆ என்றான் அதற்குதாத்தா ஐயோ இது ஐப்பசி மாத மழை என்றார்..

அதற்கு ஏன் தாத்தா இந்த மழைக்கு அப்படி என்ன சிறப்பு என்று கேட்டான்.

அதற்கு தாத்தா “ஐப்பசி அடை மழை கார்த்திகை கன மழை” என்றார்

அதற்கு எனக்கு புரியல தாத்தா என்றான்.

ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும் கார்த்திகை மாதம் கனமழை பெய்யும் ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து பெய்யும் மழையை அடைமழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்பார்கள்.

நீ நினைக்கிற மாதிரி இது கோடை மழை இல்லை.

கோடை மழை சிறிது நேரம் பெய்த நின்று விடும் ஆனால் இந்த மழை விடாமல் பெய்தது உடனே காய்ச்சல் வந்துவிடும். ஐப்பசி மாதங்களில் நன்றாக மழை பெய்யும் என்றார் தாத்தா

இந்த மழையால் பயன் ஏதும் கிடையாதா தாத்தா என்றான்.

அதற்கு தாத்தா அது எப்படி பயனில்லாமல் போகும் இவ்வாறு பருவம் பார்த்து பெய்வதால் தான் விவசாயம் செழிக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் ஆறு கிணறு குளம் குட்டைகளில் நீர் வளம் பெருகி நல்ல விவசாயம் செய்ய முடியும்.

இந்த நிலைகளை வைத்து மானாவாரி விவசாய முறையான சாகுபடியை செய்வார்கள் ஆனால் காலப்போக்கில் இந்த நிலைகள் மாறிவிட்டது பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் முறையான மழை பெய்கிறது அதற்கு மரங்கள் வளர்ப்பது ஒரு முக்கிய காரணம் தான்.

“ஐப்பசி அடை மழை கார்த்திகை கன மழை” போன்ற பழ மொழிகளையும் மெ ய்ப்படுத்த இயன்ற அளவில் மரங்களை நடவு செய்து வளர்க்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories