கரும்பு வயலுக்குள் குரங்குகள் வருவதை தடுக்க என்ன செய்யலாம்?

கரும்பு வயலுக்குள் குரங்குகள் வருவதை தடுக்க என்ன செய்யலாம்?

விவசாய நிலங்களை சுற்றிலும் புலி பொம்மைகளை வைப்பதன் மூலம் குரங்குகள் வருவதை தடுக்கலாம்.

திராட்சை நன்கு வளர என்ன செய்ய வேண்டும்?

ஒருலிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் நல்ல மகசூல் கொடுக்கும்.

கருந்துளசி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்?

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யம் தெளித்தால் கருந்துளசி நன்றாக வளரும்.

நெல் மகசூல் அதிகப்படுத்த என்ன செய்யலாம்?

நடவு வயலுக்கு அடி உரமாக 1 ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் அல்லது 2 டன் மண்புழு உரம் இடலாம்

நிலத்தை தயார் செய்யும் முன்பு பசுந்தாள் விதை தூவி பிறகு அவை வளர்ந்து உடன் மடக்கி சேற்றில் உழவேண்டும்.

கற்பூர கரைசலை பயன்படுத்தி பூச்சி தாக்குதலை தடுக்கலாம்.

தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு அமிர்தகரைசலை வாரம் ஒரு முறை பாசன நீரில் கலந்து விடுவதால் அனைத்து சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும். இதனால் நல்ல மகசூல் கிடைக்கும்.

ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு வழங்க வேண்டும்?

4 முதல் 5 மணி நேரம் நீச்சலுக்கு பிறகு தேவையான பசுந்தீவனங்களையும் அடர் தீவனங்களையும் அளிக்கலாம். கிளைரிசிடியா அதிக அளவில் கொடுப்பதைவிட மரத்தழைகளான வேலிமசால், சூபாபுல், அகத்தி, கொடுக்காய்ப்புளி போன்றவற்றையும் கொடுக்கலாம்.

கால்நடைக்கு வயிற்றுப்போக்கை எ வ்வாறு சரி செய்யலாம்? மேலும் ஏதாவது விஷ பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

நாவல் மரப்பட்டை, அத்தி , உதயம் பட்டை ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து காயவைத்து இடித்து 10 கிராம் கொடுத்தால் மாடுகள் இறுக்கமாக சாணம் போடும்.

மாடுகள் கூடுதலாக பால் சுரக்கும். இதேபோல் மழைக்காலத்தில் ஏதாவது விஷப்பூச்சிகளால் கால்நடைகள் கடிபட்டால் தும்பை செடியின் சாறு எடுத்து காதிலும் கண்களிலும் பிரிந்துவிட வேண்டும். பு ண்ணின் கடிவாயில் தும்பை கசடை வைத்துக் கட்ட வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories