மண்பானை செடி தைலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் என்ன பயன்?
மண் பானையைச் செடி தலமானது அதிக இயற்கை இடுபொருட்களை கொண்டுள்ளதால் பயிர்களின் வளர்ச்சிக்கு பல பூச்சிகளை கட்டுப்படுத்தவும் செடிகள் நல்ல ஊட்டச்சத்து பெறுவதற்கும் உதவுகிறது.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு மண்பானை செடி தலத்தை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைகளின் மீது தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்.
காய்கறி சாகுபடியில் நல்ல முளைப்புத்திறன் அதிக விளைச்சல் பெற என்ன செய்ய வேண்டும்?
காய்கறி சாகுபடியில் விதை நேர்த்தி செய்து வைப்பதன் மூலம் விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க முடியும்.
புடலை பாகல் வெண்டை பருத்திக்கொட்டை பீர்க்கங்காய் ஆகிய விதைகளை ஊறவைத்து விதைப்பதன் மூலம் விளைச்சலுக்கு அதிகமாக கிடைக்கும்.
பந்தல் வகை காய்கறி சாகுபடியில் பந்தல் அமைக்கும் மரங்களை கரையான் தாக்கத்திலிருந்து எப்படி பாதுகாக்கலாம்?
பந்தல் வகை காய்கறி சாகுபடியில் மரத்தினால் அமைக்கும் பந்தலில் கரையான் உள்ளிட்ட பூச்சிகள் குடியேறி மரத்தை அழித்து விடும்.
மரத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும் மண்ணெண்ணெய்தெ த்துவிடலாம் அல்லது பெயிண்ட் பூசி பூச்சிகளின் பூச்சிகள் அரிக்காமல் பாதுகாக்க வேண்டும் இவ்வாறு பராமரிப்பதன் மூலம் 5 முதல் 6 வருடம் வரை இந்த பந்தலை பயன்படுத்த முடியும்.
கோழி கொண்டை பூவை எந்த பட் டத்தில் பயிரிடலாம்?
அனைத்து படங்களிலும் பயிரிடலாம். மேலும் இந்தப் பூவானது வறட்சியை தாங்கி வளரும் தன்மையைக் கொண்டது.
இருப்பினும் இந்த பூவை அனைத்து பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம் இந்த கோழிக்கொண்டை பூ வானது அனைத்து வகையான மண் வகைகளிலும் வளரக்கூடியது.
ஓங்கோல் இன மாட்டின் வளரியல்பு என்ன?
ஓங்கோல் இன மாடுகள் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவை.
இந்த சிறந்த நோய் எதிர்ப்பாற்றல் கொண்டது மேலும் எல்லா வகை தட்பவெப்ப நிலையிலும் வளரக்கூடியவை.