விவசாயத்தில் அறுவடைக்கு பிறகு பல்வேறு செயல்களை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் .அந்த வகையில் தானியங்களில் உள்ள பதர்களை பிரித்தெடுக்கும் முறைகளில் முக்கியமானதும், மிகவும் எளிமையானது மான ஒரு முறையினை இன்றைய வேளாண்மை விளக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அரவிந்த் விவசாயத்தில் அறுவடைக்கு பிறகு செய்யும் செயல்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் தனது தாத்தாவிடம் கேட்டான்.
அதற்கு அவனது தாத்தா ஒவ்வொரு விவசாயிகளுக்கும் பயிர்செய்ய தேவையான விதைகள் எளிதாக கிடைக்காது. அதில் பல வேலைகள் உள்ளது. அது என்னவென்றால் விவசாயத்தின் ஆரம்ப நிலையிலிருந்து அதாவது உழவு ,விதைப்பு, உர நிர்வாகம், கலை மேலாண்மை, நீர் மேலாண்மை, ஊடு பயிர் ,அறுவடை என பல வேலைகள் உள்ளது.
அறுவடைக்குப் பிறகு இந்த விதைகள் பயன்படுத்துவதற்கு பல வேலைகள் செய்யவேண்டியுள்ளது .அதில் முதிர்ச்சியடைந்த பயிர்களை அறுவடை செய்யும் முறை பயிருக்குப் பயிர் மாறுபடும்.
இதுபோன்ற அறுவடை தானியங்களில் ஒருசில தூசிகள் மற்றும் பதர்கள் இருக்கும் அதை தூற்றி தான் சுத்தம் செய்ய முடியும் .அதாவது “கற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற பழமொழியை கூறினார்.
இதைக் கேட்ட அரவிந்து தூற்றுதல் என்றால் என்ன என்று கேட்டான்.
அதற்கு தாத்தா தூற்றுதல் என்பது காற்று அடிக்கும்போது விதங்களில் இருக்கும் பதர்கள் மற்றும் தூசிகளை பிரிக்க பண்டைய பண்பாடுகளில் பயன்படுத்திய மேலாண்மை முறையாகும் என்றார்.
ஏன் மற்ற நேரங்களில் இதை செய்யக்கூடாதா என்று கேட்டான்.
உடனே தாத்தா விதை தானியங்களில் கலந்துள்ளன லேசான தூசி,பதர்கள் காற்று வீசும்போது பறந்து சென்றுவிடும் இதனால்தான் “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று கூறுவார்கள்.
இவ்வாறு விதைகளை சுற்றி சுத்தம் செய்து தரம் பிரித்தல்விதைகளை உள்ள கற்கள் மணிக்கட்டி கள் போன்றவை தேவையற்ற பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்த விதைகளில் உள்ள முதிராத, உடைந்த ,நோய் தாக்கிய விதைகளை பிரித்தெடுக்க வேண்டும்.
அறுவடை செய்த விதைகளின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் .இதற்கு விதைகளை உலர்த்த வேண்டும் நன்கு உலராத பச்சத்தில் அப்படியே சேமித்தால் விதையின் தரம் குறைந்துவிடும்.
பிறகு விளை பொருட்களை சிறிய அளவுகளில் சிப்பமிட்டு வைக்கும்போது அவற்றை அடையாளம் காணுதல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல் உபயோகப்படுத்துதல் மற்றும் சந்தை படுத்துதல் என வேலைகள் அதிகம் இருக்கும்.
விதைகளை பாதுகாப்பாக சேமிப்பதில் முக்கியமான ஒரு சில பருவங்களில் மட்டுமே அறுவடையாகும் குறிப்பிட்ட பயிர்கள் மனிதன் மற்றும் கால்நடைகளுக்கு வருடம் முழுவதும் மிகவும் தேவைப் படுவதால் அவற்றை சேமிக்க வேண்டும்.
உணவுக்காக சேமிக்கப்படும் தானியங்களை தவிர மற்ற தானியங்களின் முளைப்புத்திறன் பாதிப்படையாமல், பூச்சி ,பூஞ்சாண தாக்குதலை தடுக்கும் வகையில் விதைநேர்த்தி செய்து சேமிக்க வேண்டும் என்றார்.