முதிர்ந்த சப்போட்டா கனியை கண்டறிவதற்கு நல்ல அனுபவம் தேவை. சப்போட்டாவில் பொதுவாக இதர பழ வகைகளை போல தோலின் நிறம், அளவு போன்றவற்றில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கும்.
நன்கு கூர்ந்து கவனித்தால் பழத்தின் மேலுள்ள கரும்புள்ளிகள் மறைந்து பழங்கள் பளபளப்பாக இருக்கும். பழத்தின் நுனிப்பகுதியில் காணப்படும் முள் போன்ற அமைப்பு உதிர்ந்து இருக்கும். அப்போது சப்போட்டாவை அறுவடை செய்யலாம்.