சின்ன வெங்காயத்தில் நுனி கருகல் நோய் தாக்கம்! – இடுபொருள் விலை உயர்வு!

உடுமலை பகுதிகளில் பெரும்பாலும் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தாண்டு அளவுக்கு அதிகமான வெயில் தாக்கத்தால் சின்ன வெங்காயத்தில் நுனி கருகல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இடுபொருட்களின் விலையும் மளமளவென அதிகரிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 3,000 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் உள்ளூரில் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தின் கொள்முதல் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, 110 நாட்களில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு வரும். விதை, நாற்று நடவு, களை, உரம், பூச்சி மருந்து என ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய நேரிடுகிறது.

நுனி கருகல் நோய் தாக்கம்
சாதகமான தட்பவெப்ப நிலை, தரமான விதை ஆகியவற்றை பொறுத்து ஏக்கருக்கு 7 டன் முதல் 10 டன் வரை விளைச்சல் கிடைக்கும். கடந்த சில வாரங்களாகவே வெயில்வாட்டி வதைப்பதால், நுனி கருகல் நோய் ஏற்பட்டு சின்ன வெங்காய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஏக்கருக்கு 6 டன் முதல் 7 டன் வரை மட்டுமே விளைச்சல்கிடைத்துள்ளது மற்றும்

விலை வீழ்ச்சி
கடந்த சில மாதங்களாக கிலோ ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்ட சின்னவெங்காயம், தற்போது ரூ.25-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவும் முதல் தரமான வெங்காயத்துக்குத்தான் இந்த விலை. இதற்கிடையேஉரத்தின் விலை மூட்டைக்கு ரூ.600வரை உயர்த்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல பூச்சி மருந்து, களைக்கொல்லி என வேளாண் இடுபொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது எனவே,

மானிய விலையில் வழங்க கோரிக்கை
வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை என குற்றம்சாட்டிய விவசாயிகள், விலை வீழ்ச்சியில் இருந்து தப்பிக்க சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து விற்கவும் வாய்ப்பில்லை. எனவே வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்குத்தான் விற்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. விதை, மருந்து, உரம் ஆகியவற்றை மானியமாக மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று கூறினார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories