விவசாயத்தில் செடிகளை விதைகள் மூலம் வளர்ப்பதற்கு பல முறைகள் உள்ளன.அதில் ஒன்றான தெளிப்பு முறை விதைப்பு பற்றியும் இங்கு காணலாம்.
ராமசாமி மகன் அமிர்த குமார். அவர் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார். அவரது தந்தை நிலத்தில் சோளத்தை விதைக்கலாம் என சொல்லிக் கொண்டிருந்தார் அதற்கு அவரது மகன் அமிர்த குமார் நான் வீட்டிலேயே இருப்பது கஷ்டமாக இருக்கிறது நான் உங்களுக்கு உதவியாக வ யிலுக்கு வந்து சோளம் தெளிக்கிறேன் அப்பா என்றான் .
அதற்கு அவரது அப்பாவும் உனக்கு சோளம் தெளிக்க தெரியுமா என்றார் எனக்கு தெரியும் அப்பா என்றார் அமிர்த குமார். பிறகு அடுத்த நாள் காலை வயலில் சோளத்தை ஏற்கனவே உழ வு செய்த வயலில் அவரது தந்தை வருவதற்கு முன்னதாக தெளித்து விட்டார்.
பிறகு அங்கு வந்த அவரது தந்தை ,அமிர்த குமாரை விதைச்சோளம் எங்கே என்று கேட்டார் அதற்கு அவர் அப்பா அதை எல்லாம் உழவு செய்த நிலத்தில் விதைத்து விட்டேன் அவ்வளவுதானே என்றார் .அதற்கு அவரது தந்தை சரிதான் …பிறகு மீண்டும் ரேடார் வேட்டர் வைத்து உழுது கரை பிடிக்க வேண்டும் என்றார்.
அதைக்கேட்ட அமிர்தகுமார் ஏன் அப்பா மீண்டும் ரோட்டர்வேட்டார்விட்டு உழவு செய்யவேண்டும். அப்படியே கரை பிடித்து நீர் பாச்சலாமே என்றார்.
அதற்கு அவனுடைய தந்தையும் “தெளித்த விதையை மறைத்து மூடு “என்று சும்மாவா சொன்னார்கள் நமது முன்னோர்கள் என்றார். அதைக்கேட்டு அவரது மகன் ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள் அப்பா.
அதற்கு அவனது தந்தை நிலத்தில் விதையை விதைத்து பிறகு மண் கொண்டு மூடி இடுதல் வேண்டும் அப்பொழுதுதான் பயிர் முளைக்கும். இதையே ” தெளித்த விதையை மறைத்து மூடு” என்ற பழமொழி விளக்குகிறது என்றார்.
அதற்கு அவரது மகன் சோளத்தில் மட்டும் இ வ்வாறு செய்ய வேண்டும? அப்பா என்று கேட்டேன் அதற்கு அவரது அப்பா விதைக்கும் விதைகள் எதுவாக இருந்தாலும் அவை மேலே தெரியாத வண்ணம் மணல் கொண்டு மூடிவிடவேண்டும் அதுமட்டுமல்ல நிலத்தில் தெளிப்பதை தவிர மண்ணில் எந்த விதைகளை நடவு செய்தாலும் மண் கொண்டு மூடி விட வேண்டியது மிகவும் அவசியம்.
அதைக் கேட்டார் அமிர்த குமார் அப்போ விவசாயத்தில் எந்த விதை விதைத்தாலும் மண் கொண்டு மூடி விட வேண்டும். அதுவும் “தெளித்த விதையை மறைத்து மூடு” என்ற பழமொழிக்கு இங்க தெளித்த விதைகளை அப்படியே விடாமல் கண்டிப்பாக மூடிவிட வேண்டும் என்பதனை தெளிவாகக் கூறுகிறது.