தோட்டத்தை இப்படியும் வளர்க்கலாம்……

வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சீசன் கிடையாது. வருடம் முழுதும் எல்லா செடிகளும் பயிரிடலாம். கேரட் சௌ சௌ, முட்டைகோஸ் போன்ற பயிர்களை கூட சென்னையிலும் வளர்க்கலாம் வருடம் முழுதும் பயன் தரக் கூடிய கீரைகள், கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறி பயிர்கள்….இரண்டு வருடம் வரை பயன்தரக் கூடிய பப்பாளி, செடி முருங்கை போன்ற சிறு மரங்கள், இரண்டு வருடம் கடந்தும் பயன்தரக் கூடிய முருங்கை, கருவேப்பிலை ….என்று வகைப் படுத்தியது பயனுள்ளதாக இருந்தது.

தக்காளி, மிளகாய், கத்தரி போன்றவை கட்டாயமாக நாற்றங்கால் முறையில் வளர்த்து, பின் அதற்கான இடத்தில் பயிரிடப் பட வேண்டும். முள்ளங்கி போன்ற பயிர்களை பிடுங்கி நட்டால் வளராது. வெண்டை, முள்ளங்கி, சௌ சௌ, கிழங்கு வகைகள், கேரட், பீட்ரூட் இவை எல்லாம் நேரடியாக விதைக்க வேண்டிய செடிகள். நாற்றங்கால் போட protray பயன்படும். பல ஏக்கரில் பயிர் செய்யும் விவசாயி கூட protray பயன்படுத்தினால் செலவு குறையும். பரந்த வயல்வெளிகளில் காய்கறிகள் பயிரிடுவதை விட வீட்டுத் தோட்டத்தில் Growbagல் பயிர் செய்வது லாபகரமானது. இதில் உர செலவு, தண்ணீர் செலவு குறைவு.

வீட்டில் தோட்டம் அமைக்கும்போது hybrid விதைகளை தவிர்த்து நாட்டு விதைகளை பயிரிட வேண்டும். ரசாயன உரத்தை தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே compost pit அமைத்தால், நம் வீட்டிலிருந்து வெளியேறும் திடக் கழிவு குறையும்.

நம் வீட்டுத் தோட்டத்தில் சோத்துக் கத்தாழை, தூதுவளை, பொடுதலை, முடக்கத்தான், கரிசாலை, தவசிக் கீரை போன்ற மருத்துவ பயனுள்ள பயிர்களை பயிரிட வேண்டும். பல வண்ண பூக்களுடன் இவை பார்க்க அழகாகவும் காட்சி தரும். கரிசாலையில் மஞ்சள் கரிசாலை, வெள்ளை கரிசாலை (கரிசலாங்கண்ணி) அதிக மருத்துவ பயன் உள்ளது.

சென்னை போன்ற நகரங்களின் வெய்யில் செடிகளின் வளர்ச்சிக்கு நல்லது. கேரட், சௌ சௌ போன்ற செடிகளை மட்டும் நிழலான இடத்தில் அமைக்கலாம்.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories