நெற்பயிரை தாக்கும் இலை கருகல் நோய்!

நெற்பயிரை தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது இலைக்கருகல் நோய் இந்த நோய் விதை, மழை, செடி உரசுதல் ,அடித்தாள்கள் ,வைக்கோல், நெற்கழிவுகள் ,நெருக்கமான நடவு அதிக அடர்த்தியுள்ள பயிர் மற்றும் மந்தமான சீதோசன நிலை ஆகியவற்றால் பரவுகிறது .இந்த இலை கருகல் நோய் பற்றி இங்கு விரிவாக காணலாம்.

நெல் பயிரைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது என்னவென்றால் இலைக்கருகல் நோய் தான். இலை கருகல் நோய் தாக்கிய நெற்பயிர் ஆரம்பநிலையில் பச்சை அல்லது மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும் இதனால் பயிரின் நுனி மட்டும் விளிம்புகள் காய்ந்துவிடும்.

நோய் முற்றிய நிலையில் பயிர் முதிர்வதை முன்பே காய்ந்துவிடும் மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளரில் உள்ள தண்ணீரில் போட்டால் நிறம் மாறுவதைக் காணலாம் இந்த நோய் பாதிக்கப்பட்ட வயல்களில் இருக்கும் தண்ணீரை மற்றவர்களுக்கு பாய்ச்சக் கூடாது.

இந்த நோயை கட்டுப்படுத்த விதைகளை சூடோமோனஸ் புளோரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நடவு செய்த 40வது மற்றும் 50-ஆவது நாளில் இல்லை வழியாக இரண்டு கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும் மேலும் இந்த கரைசலை நோய் தொற்றும் தருணத்திலும் 10 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது சோற்றுக்கற்றாழை 3.5 கிலோ.இஞ்சி 2oo கிராம் புதினா அல்லது சவுக்கு இலை 2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்கவேண்டும் பிறகு அதை ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி சூடோமோனஸ் புளோரசன் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories