நெற்பயிரை தாக்கும் சிலந்தியை இப்படிதான் கட்டுப்படுத்தணும். இல்லென்னா சேதம் பெருசா இருக்கும்..

நெற்பயிரை தாக்கும் சிலந்தி

நெல் பயிரைத் தாக்கும் சிலந்தி இனங்களை அழிப்பது தொடர்பான முறைகளைக் கையாண்டு, தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் விவசாயிகள் பார்த்துக் கொள்வது அவசியம்.

பொதுவாக, நெல் பயிரை ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் “ஒலிகொநிகஸ்ஒரைசி’ எனப்படும் ஒரு வகையான சிலந்தி இனங்கள் தாக்கும்.

இதன் தாக்குதல் காரணமாக, நெல் பயிர் அதிக சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.

இந்த வகையான சிலந்தி தாக்குதலில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வெப்பநிலை, ஈரப்பதம் அதிக அளவில் நிலவும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்த சிலந்தியின் தாக்குதல்கள் நெற்பயிரில் அதிகமாக காணப்படும்.

இந்த சிலந்தி தாக்குதலின் அறிகுறியாக, பயிர்களின் அடி இலைகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற துகள்கள் போன்ற புள்ளிகள் தோன்றும். இலை நரம்புகளுக்கிடையில் உள்ள பகுதி வெளுத்துக் காணப்படும்.

பின்னர், அனைத்து இலைகளிலும் இப்புள்ளிகள் பரவி வெண்ணிறமாக மாறிவிடும். இதனால் பயிரில் ஒளிச்சேர்க்கை செய்வது தடைபட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories