நெல் மகசூல் அதிகப்படுத்த என்ன செய்யலாம்?

 

பீன்ஸ்செடியில் சாறு உறிஞ்சும் பூச்சி அஸ்வினி ஏற்படும் சேதம் என்ன?

செடியின் இலைகள் மஞ்சள் காம்புடன் இருக்கும் .பூச்சிகள் இளம் காய்கறிகளை சுற்றி சுடர் நிறத்தில் கூட்டமாக காணப்படும் . எறும்புகள் நடமாட்டம் இருக்கும்.

இளம் பூச்சி மற்றும் தாய்ப்பூச்சி அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் வயிற்றுப் பகுதியில் இரண்டு குழாய் போன்ற அமைப்புடன் இருக்கும்.

திறன் நுண்ணுயிரி தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவைப்படும்?

திறன் நுண்ணுயிர் தயாரிக்க பத்திற்கும் மேற்பட்ட மரம் செடி கொடிகளின் வேர்ப்பகுதியில் உள்ள மண் அரை கிலோ, பரங்கி பழம் 2 கிலோ, பப்பாளி பழம் 2 கிலோ, வெல்லம் ஒரு கிலோ ,நீர் தேவையான அளவு, நாட்டுக்கோழி முட்டை 2 அல்லது 3 ,இருபது முதல் முப்பது லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாத்திரம் போன்றவை தேவைப்படும்.

இயற்கையில் நோய் இல்லா சாகுபடிக்கு எந்த முறையைக் கையாள வேண்?

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் ரகங்களை தேர்வு செய்து விதைத்தல், நோயின் தாக்குதல் அதிகம் உள்ள நிலங்களில் எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை சாகுபடி செய்தல் ,போன்ற முறைகளை கையாளுதல் அதிக லாபம் பெறலாம்.

நெல் மகசூல் அதிகப்படுத்த என்ன செய்யலாம்?

நடவு வயலுக்கு அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் அல்லது 2 டன் மண்புழு உரம் இடலாம்.

நிலத்தை தயார் செய்யும் முன்பு பசுந்தாள் விதை தூவி பிறகு அவை வளர்ந்த பிறகு மடக்கி சேற்றில் உழவேண்டும்.

கற்பூர கரைசலை பயன்படுத்தி பூச்சிகளை தடுக்கலாம்.

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை வாரம் ஒரு முறை பாசன நீரில் கலந்து விடுவதால் அனைத்து சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும். இதனால் நல்ல மகசூல் கிடைக்கும்.

ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு வழங்க வேண்டும். குளோரியா இ லை அதிக அளவிலும் வழங்கலாமா?

4 முதல் 5 மணி நேரம் மேய்ச்சலுக்கு பிறகு தேவையான பசுந்தீவனங்களையும் ,அடர் தீவனங்களையும் அளிக்கலாம். குளோரியா அதிக அளவில் கொடுப்பதைவிட வேலிமசால், சூபாபுல் ,அகத்தி கொடுக்காபுளி ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories