பனை மரத்தின் விதைகளை எப்படி ஆண் பெண் பனை விதை என அறிவது? எப்படி விதைக்க வேண்டும்?

ஒற்றை விதை மட்டும் இருக்கும் பனை பெண் பனை, 2 விதை ஆண் பனையாகவும் சில சமயம் மூன்று விதைகள் உடையதிலும் இரண்டு ஆண் ஒரு பெண் விதைகளைக் கொண்டிருக்கும்.

எனவே ஒற்றை விதை உள்ள இவற்றை விதைகளை விதைக்கலாம்.1o பனைகளுக்கு 1 ஆண் பணையில் தேவைப்படும். பத்து ஒற்றை விதை உடைய பனையை விதைத்த பகுதியில் ஒரு மூன்று விதை உள்ள பனை விதைகளை விதைக்கலாம்.

பச்சை பயிரை அறுவடைக்கு பின் எவ்வாறு சேமிக்கலாம்?

பச்சை பயறுடன் சாம்பல் கலந்து மண் கலத்தில் சேமித்தால் அதிக நாள் சேமிக்கலாம்.

பச்சை பயறுடன் விளக்கெண்ணெய் தடவினால் அதன் தரம் அதிகரிக்கும் அல்லது இரண்டு ரூபாய் சேமித்தால் கூண்வன்டு தாக்குதலிலிருந்து காப்பாற்றலாம்.

நெட்டை ரக தென்னை மரம் நடவு செய்து ஓராண்டு ஆகிறது ஆனால் சிறு அளவுக்குக்கூட வளர்ச்சி இல்லை மேலும் ஒவ்வொரு மரக்கன்றுகளும் இலைக்கருகல் நோய் ஏற்பட்டு உள்ளது இதற்கு தீர்வு காணும் வழி என்ன?

இஎம் கரைசல் 15 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து பாசனம் செய்யலாம்.

கொழுஞ்சி ,இலை நொச்சி, எருக்க இலை போன்ற பசுந்தாள் உரங்களை தென்னை மரத்தின் அடியில் இட்டு மண்ணைப் போட்டு மூடி விடலாம் இவை மரத்திற்கு நல்ல உரமாக பயன்படும்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் சூடோமோனஸ் மற்றும் 3 கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்து தெளித்து விடலாம். அல்லது நீர்பாசனத் உடன் கலந்து விடலாம்.
மல்லிகை செடியின் வேர் வளர்ச்சி நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

மல்லிகைச் செடிகளை இடையில் பசுந்தாள் உரங்களை பயிரிட்டு மடக்கி உழுது மண் அணைத்து விட வேண்டும்.

10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து நீர் பாசனம் வழியாக கொடுக்கலாம் இதன் மூலம் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

சினை ஆடுகளை எவ்வாறு பராமரி பராமரிக்கலாம்?

சினை ஆடுகளுக்கு தினமும் 20o கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும் மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும் கடலைக் கொடி மர இலைகள் பயறு வகைத் தீவனப்பயிர்கள் கொடுக்கலாம் பசுந்தீவனங்களை குறைத்து உலர் தீவனங்களை அதிகளவில் கொடுக்கலாம்.

அதிக நேரம் வெயிலில் அனுப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மேலும் நீண்ட தொலைவு ஆடுகளை ஓட்டிச் செல்லக்கூடாது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories