பலாப்பழம் எப்படி பயிரிடுவது

ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.

மண்
வண்டல், செம்மண்னில் பாலா சிறப்பாகவிளையும். ஆனால் நிலம் ஆழமாகவும் நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக உழுது பின்பு ஒரு மீட்டர் அகலம் ஒரு மீட்டர் ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு குழியிலும் செடிகள் நடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு நடவு முறையில் 75% தொழுவுரம் 15% மண்புழு உரம் 5%செம்மண் 5% வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து குழியை நிரப்பி லேசாக தண்ணீர் ஊற்றி ஆற விட வேண்டும்.

விதை
விதை மூலம் உற்பத்தி செய்த நல்ல காய்ப்பு உள்ள தாய் மரத்தில் ஒட்டுக் கட்டி நடவு செய்ய வேண்டும்.

விதைத்தல்

ஒட்டுச்செடி 8×8 மீட்டர் இடைவெளி குழியின் மையத்தில்நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

ஒரு மாதம் வரை வாரம் இரு முறையும் அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories