விவசாயத்தின் ஆதரவுத் தொழிலானது கால்நடை வளர்ப்பு. ஏனெனில், பயிர் கைவிடும் சமயத்தில், பால்வியாபாரம் கைத்தூக்கி விடும் என்றார்.
அவ்வாறு பால்பண்ணை அமைத்து, பால் வியாபாரத்தின் மூலம் வருவாய் ஈட்ட நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.
நல்ல மாடு மற்றும் எருமைகளைத் தேர்வு செய்யும் முறை
பசுக்களின் அடையாளங்கள் (Signs of cows)
பசுக்கள் பார்க்கச் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும்.
பின்பகுதி பெரியதாக இருத்தல் அவசியம்.
உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும்.
பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும். அதனைத் தொட்டவுடன் பால் வழிய வேண்டும்.
பால்மடி, பால் சுரக்கும் பால் கொடிக்கண், தொப்புள் வரை நீண்டு இருப்பது அவசியமான ஒன்று.
பாய்ச்சல் இல்லாமலும் இருக்க வேண்டும்.
இரண்டாம் ஈற்று மாடாக இருக்க வேண்டும். 2ம் ஈற்றில் இருந்து 4-ம் ஈற்று வரை பால் படிப்படியாக அதிகமாகிவரும்.
5ம் ஈற்று முதல் பால் குறையத் தொடங்கிவிடும்.
வால் நீண்டு இருத்தல் அவசியம்.
மிகச்சிறிய மடியாக இருந்தால், பாலின் அளவு குறைவாகவே இருக்கும். மடித் தொங்கிக் கொண்டும், துருத்திக்கொண்டும் இருக்கக்கூடாது.
பால் நாளங்கள் நிறைந்து இருக்க வேண்டும்.
மேல் உதடு இலேசாக ஈரப்பசையுடன் இருக்க வேண்டும்.
தீவனங்களை நன்றாக அசைபோட்டுக் கொண்டிருக்க வேண்டும் இதில்
பால் காம்புகளின் இடைவெளி ஒரே சீராக இருக்க வேண்டும்.
மாட்டின் தோல் மென்மையானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.
மூக்குத் தண்டு நேராக இருப்பது அவசியம். கண்கள் பிரகாசமாக துருத்துருவெனி இருக்க வேண்டும்
இத்தனை அம்சங்களும் நிறைந்திருக்கும் பசு மற்றும் எருமைகளை வாங்கி பால்பண்ணை அமைத்தால், நல்ல லாபம் ஈட்டலாம் மற்றும்
இந்த அனைத்து அம்சங்களும் நிறைந்த பசு மற்றும் எருமைகளைத் தேர்வு செய்து பால் பண்ணை அமைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றுக்கு தரமான தீவனம் அளித்து, முறையாகப் பராமரித்தால், பால் வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்றார்.