மண்புழு உரம் தயாரிக்கும் முறை

 

 

மண்புழு உரம் தயாரிக்க 12 அடி நீளம், 3 அடி அகலம்,இரண்டு அடி உயரமுள்ள தொட்டி அல்லது படுக்கைகள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த படுக்கையில் 5 முதல் 10 சென்டி மீட்டர் உயரத்திற்கு மரத்தூள் துண்டாக வெட்டப்பட்ட கரும்புத் தோகையை தென்னை நார்க்கழிவு போன்றவைகளில் ஏதேனும் 8 8அடித்தளம் அமைக்க வேண்டும்.

அதற்குமேல் கால்நடைகளின் சாணம்( மக்கியது )அல்லது தாவர கழிவுகள்(மக்கியது )இடவேண்டும்.

அதன் பிறகு அதில் மண் புழுக்களை விட வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 1,000 முதல் 1,500 மண்புழு இருக்குமாறு விடவேண்டும். புழு களை விட்ட பிறகு அதன் மேல் காய்ந்த வைக்கோல் கொண்டு மூடிவிட வேண்டும்.

இதில் நீர் தெளித்து வரவேண்டும். மண்புழு உரம் எடுப்பதாக இருந்தால் தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.

இதனால் மண்புழுக்கள் அடிப்பகுதிக்கு சென்றுவிடும் உரங்களை எளிதாக எடுக்கலாம்.

படுக்கைகள் தயாரித்து 60 முதல் 70 நாட்களில் மண்புழு உரம் தயாராகி விடும். எடுக்கப்பட்ட உரத்தினை சல்லடையில் சலித்து தரமான மண்புழு உரமாக பிரித்தெடுக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories