மழைக்காலங்களில் வயல்வெளியில் படைபெயடுக்கும் பாம்புகள்- எச்சரிக்கை தேவை!

மழைக்காலங்களில் வயல்வெளிகளில் நாகப்பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், விவசாயிகள் சற்று விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

உலகளாவிய சுற்றுச்சூழலியல் தொடர்பாக இ-லைஃப் பத்திரிகை சார்பில் (e-Life Journal) அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கடந்த 2000-வது ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 12 லட்சம் இந்தியர்கள் பாம்புக்கடிக்கு தங்கள் இன்னுயிரை இழந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 முதல் 69-க்கு இடைப்பட்ட வயதுடையவர்கள். அதிலும் குறிப்பாக பாதிக்கும் மேற்பட்ட பாம்புக்கடி சம்பவங்கள், குறிப்பாக ஜூன் முதல் செப்டர்மர் வரையிலான மாதங்களில் நிகழ்ந்துள்ளன.

உயிர்பறித்தப் பாம்புகள் (Snake bites)
இவர்களில் பலருக்கு காலிலேயே, பாம்புக் கடித்துள்ளது. குறிப்பாக நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற அதிக விஷம் கொண்ட பாம்புகளின் கடிக்கு ஆளாகியே இவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

சிகிச்சைக் கிடைக்கவில்லை (Loss of Treatment)
பலியானவர்களில் பெரும்பாலானோருக்கு, முறையான சிகிச்சைக் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில், ஆரம்ப சுகாதார மையங்கள் அருகில் இல்லாததும், மரணத்திற்கு மற்றுமொரு காரணமாக அமைந்திருக்கிறது.

பாம்பின் இயல்பு (Snakes Habit)
ஏனெனில் மழைக்காலங்களில் பாம்புகள் வசிக்கும் புற்றுகளுக்குள், தண்ணீர் செல்வதால், அவற்றின் வாழ்விடம் பாதிக்கப்படுகிறது.தங்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுவதால், தன் வசிப்பிடத்தை விட்டு வயல்வெளிக்கு பாம்புகள் வர நேர்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் விவசாயிகள் கூடுதல் கவனத்துடனும், விழிப்புடனும் இருக்குமாறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories