மழைக் காலத்தில் செய்ய வேண்டியவை!

 

தற்போது பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் மழை இல்லாமல் வரட்சியினால் வாடிக் கிடந்த பயிர்களை எல்லாம் துளிர்விட ஆரம்பித்துவிட்டது.

இந்த மழைக்காலத்தில் எப்போதும் போல விட்டுவிடாமல் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல யோசனை.

ஒரு சிறிய மண்வெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்.நாம் காய்கறிகளை வளர்க்க புறப்படலாம்.

உங்கள் வீட்டில் காய்கறி வளர்ப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். காய்கறிகள் செலவு செய்யும் பணத்தில் பாதிக்கு மேல்மிச்சப் படுத்த முடியும்.

இன்றைய காலகட்டத்தில் காய்கள் விலைகள்நாம் சற்று யோசிக்கமுடியாத அளவுக்கு அதிகமாக விற்கப்படுகிறது.

இந்த மாதிரியான சூழ்நிலைகளை வீட்டில் காய்கறிகள் வளர்ப்பதன் மூலம் எளிதாக தவிர்த்துவிடலாம். இதன்மூலம் பணத்தையும் நாம் சம்பாதிச்ச படுத்த முடியும் .

ரசாயன மருந்துகள் கலக்காத காய்கறிகள் உங்களுக்கு கிடைக்கும்.ரசாயன முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த காய்கறிகளின் சுவைதான். இயற்கையாக வளர்க்கப்படும் காய்கறிகளின் சுவையே தனி. சாப்பிட்டு பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

வீட்டுத் தோட்டத்தில் காய்கறி வளர்ப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியாதே! என்றெல்லாம் சொல்லாதீர்கள். முதலில் தக்காளியை பிழிந்து விட்டு வளர்க்க ஆரம்பியுங்கள். பிறகு கீரை ,வெண்டை ,கத்தரி என ஒவ்வொன்றாக பயிரிடலாம்.

வீட்டில் இடம் இல்லையா? கவலை இல்லை. மாடியில் மண் தொட்டியில் வைத்து காய்கறிகளை வளர்க்கலாம்.

மரம், செடி, கொடிகளை வளர்ப்பதால் நமக்கு உற்சாகம் கிடைக்கும். எவ்வளவு விலை கொடுத்து காய்கறிகளை நாம் வாங்கி வைத்து சமைத்து சாப்பிட்டால் நாம் விதைத்த செடியிலிருந்து ஒரு காயைப் பறித்து சமைத்துச் சாப்பிடும் சந்தோஷத்திற்கு ஈடு ஆகாது.

இந்த மழைக் காலத்தை முழுமையாக நீங்கள் அனுபவிக்க காய்கறி வளர்த்து அதன் மூலம் லாபமடைவீர்கள்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories