மாட்டின் கால்களில் பெரிய ஈ மொய்கிறது. கட்டுப்படுத்த என்ன செய்யலாம்

 

கற்பூரவள்ளி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரேயில் ஊற்றி ஸ்பிரே செய்து ஈக்களை விரட்டலாம். மழைக்காலங்களில் மாட்டுத்தொழுவத்தில் அதிகமாக காணப்படும். அந்தஈக்கள் பசுக்களை கடித்து தொந்தரவு செய்யும். அதற்கு இந்த முறை ஒரு தீர்வாக இருக்கும். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் கீழே இருந்து 6 இஞ்ச் உயரத்தில் ஈக்கள் உள்ளே புகும் அளவிற்கு சிறிய துளைகள் இடவேண்டும் .துளைகளுக்கு ஒரு இன்ச் கீழே வரை தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

அதில் 10 முதல் 15 கிராம் அளவில் கருவாட்டு தூளை போட வேண்டும். பிறகு பாட்டிலை மூடி ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் வைக்கவேண்டும் .ஈக்கள் அந்த சிறிய துளையில் உள்ளே சென்று வெளியே வர முடியாமல் இறந்துவிடும் .இதனால் ஈக்கள் கட்டுப்பட்டு மாடுகள் எவ்வித தொந்தரவும் இல்லாமல் இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories