“மாரி இல்லையேல் காரியம் இல்லை” – இது சரியான பழமொழி!

விவசாயத்தில் மிக முக்கியமானது தண்ணீர் இந்த தண்ணீர் நமக்கு மறைமுகமாக கிடைக்கிறது அவ்வாறு கிடைக்கும் மழையும் குறித்து வேளாண் பழமொழி விளக்கத்தில் காணலாம்.

புவனாவின் தந்தை மானாவாரியாக கடலை விதிக்கலாம் என வி தை வாங்குவது குறித்து தனது நண்பரிடம் தொலைபேசி மூலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவர் பேசி முடித்த பிறகு அருகில் நின்ற புவனா…. அப்பா மானாவாரி என்று சொல்கிறீர்களே அப்படி என்றால் என்ன ஏனென்றால் அதற்கு அவளுடைய தந்தையை மானாவாரி நிலம் என்றால் மழையை நம்பி மட்டும் விவசாயம் செய்யப்படும் நிலத்தை குறிக்கும் இதை வானம் பார்த்த பூமி என்றும் கூறுவார்கள்.

அதற்கு புவனா இந்த நிலத்தில் மழை இல்லை என்றால் ஒரு பலனும் கிடைக்காது என்றால்.

அதற்கு அவர்” மாறி இல்லையேல் காரியம் இல்லை” என்று சொல்லலாம் ஏனென்றால் மழை பெய்தால்தான் மானாவாரி நிலங்களில் நன்கு விளைச்சல் காணும் அதுவரை எந்த விளைச்சலும் இருக்காது என்றார்.

புவனா சரி அப்பா இந்த மழை எப்படி ஒரு பயிர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்கும் என்றால்.

அதற்கு அவளுடைய தந்தையை பருவம் பார்த்து உழ வு,களை,உரம் ஆகிய முறைகளை கவனமாக கடைப்பிடித்தால் மட்டுமே மானாவாரி நிலத்தில் விவசாயம் சாத்தியமாகும் என்றார்.

அதற்கு புவனா இந்த மானாவாரி சாகுபடி முறையில் எந்தெந்த பயிர்களை சாகுபடி செய்யலாம் என்றால்.

அதற்கு அவருடைய தந்தையை தமிழகத்தை பொறுத்தவரையில் 42% நிலம் மானாவாரி நிலம் ஆகவே தான் உள்ளது இவ்வாறு உள்ள நிலத்திலேயே தானிய பயிர்கள் சிறுதானியப் பயிர்கள் பயறுவகை பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்யப்படுகின்றன.

மேலும் மழை பெய்யும் காலங்களில் கிடைக்கும் மழை நீரை தேக்கி வைத்து ஒரு சில பகுதிகளில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன இவ்வாறு பெய்யும் மழையும் பெய்யாமல் பொய்த்து போனால் விவசாயத்தில் சில இடர்பாடுகள் வருகின்றன.

இதனை தான் நம் முன்னோர்கள்” மாறி இல்லையேல் காரியமில்லை” என்று பழமொழி விளக்கத்தின் மூலம் தெளிவாக கூறியுள்ளார்கள்.

எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மழையை வரவேற்கும் வகையில் நாம் மரங்களை வைத்தல் மழை நீரை சேகரித்து பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற ஒருங்கிணைந்த முறைகளை பின்பற்றி மழை வளத்தை பெருக்க வேண்டும் என்றார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories