காய்கறி செடிகளில் ஏற்படும் வைரஸ் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய் 100 மில்லி புங்கன் எண்ணெய் சிறிதளவு காதி சோப்புக் கரைசலை கலந்து 20 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
அதிக வெப்பம் குளிர் காற்றும் மாறி மாறி வந்தால் நாட்டு மாட்டின் புளித்த மோரும் நடுப்பதம் உள்ள இளநீரும் கலந்து தெளிக்க வேண்டும்.
நெல் வயலில் கலைகள் வராமல் எப்படி தடுக்கலாம்?
கலைகள் தாக்காத நெல் ரகத்தை உபயோகித்தல் , கலைகள் தாக்காதவாறு விதை பாத்திகள் அமைத்தல், சுத்தமான கருவிகள் பயன்படுத்தல் வேண்டும்.
சுத்தமான பாசன கால்வாய் மற்றும் வரப்புகள் அமைத்தல் வேண்டும் நீண்ட காலம் வாழ்கின்ற கலைகளின் தழை உறுப்புகளை நீர் மூலம் எடுத்து வராமல் தடுத்தல் போன்ற முறைகளை பின்பற்றி கலைகளை தடுக்கலாம்.
களிமண் நிலத்தில் கீரை சாகுபடி செய்யலாம்?
களிமண் நிலத்தில் கீரையை சாகுபடி செய்யலாம். ஆனால் முறையான இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.
களிமண்ணில் கீரை சாகுபடி செய்யும் போது மூன்று முதல் நான்கு முறை பாசனத்தில் கீரை அறுவடைக்கு வரும்.
அதோடு ஒரு முறை தண்ணீர் விட்டால் மூன்று முதல் நான்கு நாட்கள் ஈரம் அப்படியே இருக்கும்.
கீரையின் இலை இலேசாக வாடத் தொடங்கும் போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
வாழைத்தார் அறுவடை செய்த பிறகு அந்த மரத்தை என்ன செய்யலாம்?
வாழைத்தார் அறுவடை செய்த பிறகு அந்த தாய் மரத்தை அப்படியே விட்டு விட்டால் அந்த மரத்தில் உள்ள சத்துக்கள் பக்க கன்றுகளுக்கு உரமாகின்றன.
மேலும் அதனுடன் இடுபொருட்களை இட்டு பாசனம் செய்து வந்தால் பக்கக் கன்றுகள் நன்றாக வளர்ந்து அடுத்த ஒன்பது மாதங்களில் பலன் கொடுக்கும்.
கால்நடை தீவனத்திற்கு அகத்தி எப்பொழுதும் பயிர் செய்ய வேண்டும்?
அகத்தி மரத்தின் இலைகள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரதச் சத்தை 25 சதம் கொண்டுள்ளது.
அனைத்து கால்நடைகள், குறிப்பாக வெள்ளாடுகள் விரும்பி உண்ணுஅகத்தியை ம் வடிகால் வசதி கொண்ட நீர் பாசன வசதி உள்ள நிலத்தில் வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.