நெற்கதிரில் உறை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
கருவேல இலை பொடி சாறு 5 சதவிகிதம் நெய்வேலி காட்டாமணக்கு இலை சாறு 5 சதவீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் நெற் கதிரில் உறை அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.
புடலங்காயில் அதிகமாக பூச்சித்தாக்குதல் உள்ளதற்கு என்ன செய்யலாம்?
இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம்.
வாழைத்தோட்டத்தில் எக்டருக்கு 5 முதல் 6 டன் கரும்பு தோகையை பரப்பி மூடாக்கு போடலாம் அல்லது பாலீதீன் விரிப்பை பயன்படுத்துவதும் சிறந்த முறையாகும்.
வெள்ளாடுகளுக்கு ஏற்ற தீவனங்கள் என்ன?
வெள்ளாடுகளுக்கு பசுந்தழை, உலர் தீவனம், கலப்புத் தீவனம் போன்றவை கொடுக்கலாம்.
மேலும் புளியங்கொட்டை புண்ணாக்கு வேலிக் கருவை நெற்றுகள் எள்ளு புண்ணாக்கு போன்றவை தீவனமாகக் கொடுக்கலாம்.
குதிரை மசால், வேலி மசால் வகைகள் தீவன சோள புல்வகைகள் போன்றவை தீவனமாக அளிக்கலாம்.
அரிசித் தவிடு அல்லது கோதுமை தவிடு கொடுக்கலாம்.
வேர்க்கடலை ,கொடி துவரை இலை போன்ற தீவனங்களை கொடுக்கலாம்.
சினை மாட்டிற்கு பசுந்தீவனம் எப்படி கொடுப்பது?
சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும்.
கலப்பு தீவனத்தை எட்டாவது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும் ஒன்பதாவது மாதம் 11/2 முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
மாடுகளின் பாலில் கொழுப்பு சத்து அதிகரிக்க எந்த தீவனம் அளிக்கலாம்?
பருத்திக்கொட்டை, புண்ணாக்கு ,கடலை புண்ணாக்கு போன்றவை கொடுக்கலாம்.