வாழை மரம் நட்டுஒரு வாரம் ஆகிறது எவ்வாறு பராமரிப்பது.

 

முறையான நீர் பாசனம் செய்யவேண்டும். வாழைக்கு ஏக்கருக்கு 2000 கிலோ என்ற அளவில் மண்புழு உரம் இடுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் .நடவு செய்த 45வது நாள் கழித்து 10 கிலோ மக்கிய தொழு உரம் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, போன்ற உயிரி உரம் 50 கிராம் கலந்து கலவையை ஒவ்வொரு வாழைக்கும் இடவேண்டும்.

மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆனி மாதத்தில் என்ன விதைக்கலாம்.

கத்தரி, தக்காளி ,கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, மிளகாய், பாகல், பீர்க்கன், முள்ளங்கி கொத்தவரை போன்ற காய்கறிகளை பயிர் செய்யலாம்.

ஆவணி முதல் வாரத்தில் மிளகாய் நடலாமா ?ஒரு நாற்றில் எத்தனை ரக விதை போடுவது.

ஆவணி முதல் வாரத்தில் மிளகாய் நாற்று உற்பத்தி செய்யலாம். மிளகாய் நாற்று நடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே நாற்று உற்பத்தி செய்ய வேண்டும்.

மிளகாயின் வைகாசி,ஆவணி, புரட்டாசி ஆனி , கார்த்திகை மற்றும் தை மாசி மாதங்களில் நன்கு வளரும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories