விலை மதிப்புமிக்க தேக்கு மரம் சாகுபடி செய்யும்போது இவற்றை கவனத்தில் கொள்ளவும்…

மனிதர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மரங்களில் முதன்மையானது தேக்கு. விலை மதிப்புமிக்க மரம் தேக்கு. அந்த காலத்தில் தேக்கு மரங்கள் பயன்படுத்தி வீடு கட்டுவது ஒரு கௌரவமாக கருதப்பட்டது.

தேக்கு ஒரு வெப்ப மண்டல பயிர். விதைகள் மூலமும், போத்துகள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதிகப்படியாக ஆடிமாதம் நடவு செய்ய படுகிறது. தேக்கு நடவு செய்யும்பொழுது கன்றுக்கு கன்று 10 அடி இடைவெளி இருக்குமாறு நடவேண்டும்.

குழியின் அளவு 1.5×1.5 அடி இருக்கவேண்டும். அப்போது தான் மரங்கள் விரைவாக பருக்கும். குழியின் அளவு 1.5×1.5 அடி இருக்கவேண்டும். குழிக்குள் 1/2 அரைகிலோ வேப்பம்புண்ணாக்கு, 100 கிராம் சுண்ணாம்பு தூள், 2 கிலோ மண்புழு உரம் இவற்றை சிறிது அளவு மண்ணுடன் கலந்து தேக்கு கன்றுகள் நட வேண்டும். தேக்கு நட்ட இருபது வருடங்களுக்கு பிறகு வெட்ட தயாராகிவிடும்.

மண் தன்மைக்கு ஏற்றபடி தண்ணீர் பாய்ச்சவேண்டும். சதாரணமாக இரண்டு வகையான நோய்கள் இம் மரங்களை தாக்கும். இலைகளை கடித்து உண்ணும் புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சி. தேக்கில் இந்த தாக்குதல் ஏற்படும் போது நல்ல மழை பெய்தால் தானே பூச்சி தாக்குதல் சரியாகி விடும்.

மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும். தேவைப்பட்டால் மண்புழு உரத்தை மாதம் ஒருமுறை வேரில் இடலாம், இது அவரவர் வசதிக்கேற்ப செய்யலாம்.

தேக்கு மரம் நன்கு வளர்ந்த உடன், அதாவது அடி மரம் நம் முழங்கால் அளவு பருமன் வந்த உடன் தரையில் யில் இருந்து முப்பது அடி உயரத்தில் தலையை துண்டாக வெட்டி விடுவதன் மூலம் மரம் உறிஞ்சும் சத்துக்கள் அனைத்தும் மரத்தின் நடுப்பகுதி பருமன் அடைய உதவும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பக்க கிளைகளை கழித்து விடவேண்டும்.

செம்மண்ணில் வளரும் தேக்கு மரங்கள் விரைவில் வளரும். மேலும் மரம் விரைவாக வைரம் பாயும். பத்து வருடங்களுக்கு பிறகு வைரம் பாய ஆரம்பிக்கும். திசு வளர்ப்பு முறையில் பெறப்படும் கன்றுகள், விரைவாகவும் மிக அதிகமாகவும் மரங்கள் பருக்கும். ஆனால் திசு வளர்ப்பு முறையில் பெறப்படும் கன்றுகள் விலை உயர்ந்தவையாக இருக்கும்.

செம்மண்ணில் வளரும் தேக்கு மரங்கள் விரைவில் வளரும். மேலும் மரம் விரைவாக வைரம் பாயும். பத்து வருடங்களுக்கு பிறகு வைரம் பாய ஆரம்பிக்கும். திசு வளர்ப்பு முறையில் பெறப்படும் கன்றுகள், விரைவாகவும் மிக அதிகமாகவும் மரங்கள் பருக்கும். ஆனால் திசு வளர்ப்பு முறையில் பெறப்படும் கன்றுகள் விலை உயர்ந்தவையாக இருக்கும்.

நன்கு வளர்ந்த மரங்களை இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னர் வெட்ட ஆரம்பிக்கலாம். வீட்டுக்கு தேவையான அனைத்து மரச்சாமான்களையும் தேக்கு மரத்தில் செய்யலாம். வெட்டிய மரங்கள் குறைந்தது ஐந்து மாதம் நிழலில் காய வைக்கவேண்டும். பின்னர் தான இயந்திரத்தில் அறுக்க வேண்டும். ஈரத்தில் அறுத்தால் கட்டை நாள்போக்கில் வளைந்து விடும். அடுத்து தேக்கு மரங்களில் கரையான் அரிப்பது அரிதானது.

ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஐந்து தேக்கு மரங்களை நடவேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து மரங்கள் என்ற விகிதத்தில் மரங்கள் நாம் நடும் போது தமிழ் நாடு சோலை வனம் ஆகிவிடும்.

இரண்டாவது பல இடங்களில் வீட்டு மனைகள் பலர் வாங்கி வைத்து உள்ளனர். அந்த காலி மனைகளில் தேக்கு மரங்களை நட்டு விடலாம். அடுத்து ஆடுகள், மாடுகள் தேக்கு செடிகளை மேய்வது இல்லை அதனால் பெரிதளவு பராமரிப்பும் தேவைப்படாது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories