விவசாயம் செய்ய விரும்புவர்கள் இந்த நுணுக்கங்களை தெரிந்துக் கொள்வது நல்லது

1.. பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும்.

எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம்.

2.. முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.

3.. சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தும்.
4. அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பின்பற்றலாம்.

எ.கா: பயிறு / பருத்தி – கோதுமை / நெல்

5. தானியப் பயிருகளுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: சனப்பை – நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயிறு – கோதுமை, மக்காச் சோளம்.

6. நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். எ.கா: மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள்

7. வேளாண் / காய்கறிகளை பயிர்களுக்குப் பின் தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: சோளம் + தட்டைப் பயிறு – கோதுமை / உருளைக் கிழங்கு / முட்டைக்கோஸ் / வெங்காயம்

8. சில விதைத் தாவரங்களை தொடர்ந்து தண்டு அல்லது வேர்த் தாவரங்களை ஊன்றலாம்.

9. மறுதாம்புப் பயிர்களுக்குப் பின் ஆழமான வேர்கள் செல்லக்கூடிய பயிர்களைப் பயிர் செய்யலாம்.

10. சுத்தப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். எ.கா: உருளைக் கிழங்கு / கொலகேசியா / மஞ்சள் / பீட்ரூட் / கேரட் – நெல் நாற்றாங்கால் / வெங்காய நாற்றாங்கால் / புகையிலை நாற்றாங்கால் / காய்கறிப் பயிர்களின் நாற்றாங்கால்

11. ஆழமான வேர்களைத் தொடர்ந்து, மேலோட்டமான வேருள்ள பயிர்களை விதைக்கலாம். எ.கா: பருத்தி / ஆமணக்கு / துவரம் பருப்பு – உருளை கிழங்கு / லெண்டில் / பச்சைப் பயிறு

12. அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை கோடை உழவு முடிந்த உடன் பயிரிட்டுவிட்டு அதன்பின்பு சற்று இறுகிய மண்ணிலும் வளரக்கூடிய தாவரங்களை வளர்க்கலாம். எ.கா: உருளைக் கிழங்கு / முள்ளங்கி / சர்க்கரை வள்ளிக் கிழங்கு / கரும்பு – உளுந்து / பச்சைப் பயிறு / பசுந்தாள் உரப் பயிர்கள்

13. ஒருவிதையிலைத் தாவரங்களைத் தொடர்ந்து இருவிதையிலைத் தாவரங்கள் பயிரிட வேண்டும். எ.கா: உருளைக் கிழங்கு / கடுகு / நிலக்கடலை / பயிறு வகைகள் – நெல் / கோதுமை / கரும்பு / கம்பு அல்லது இவற்றை கலந்தும் விதைக்கலாம்.

14. சில பயிர்கள் கெட்ட வாடையை வெளிப்படுத்தும். சாதாரண பயிர்களைப் பயிரிட்ட பின் இப்பயிர்களைப் பயிரிட்டால் சில வகைப் பூச்சித் தாக்குதலில் இருந்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

15. ஊடுபயிரல்லாத தனிப்பயிர் செய்தபின் அதிகம் அரிதாள் கட்டை விடும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: கரும்பு / வெள்ளைச் சோளம் / பருத்தி / அவரை – தீவனப் பயிர்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories