வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற சிறகு அவரைக்காய்! தென்னையில் வாடல் நோயைக் நீக்குகிறது!

தமிழில் “சிறகு அவரை” என்றும், மலையாளத்தில் ‘சதுர வரை’ என்றும் வழங்கும் வடமாநிலங்களில் “கோவாபீன்” என்றும் அழைக்கப்படுகிறது. அறிவியல் பெயர் : “சொபோகார்பஸ் டெட்ராகோனலோபஸ்” (Psophocarpustetragonolobus). இதன் தாயகம் நியூகினி என்றாலும் காற்றில் ஈரப்பதம் (Moisture) அதிமாக இருக்கும் வெப்ப மண்டலங்களான தென்கிழக்கு ஆசியநாடுகளில் அதிகம் சாகுபடி (Harvest) செய்யப்படுகிறது என்றார்.

சிறப்பு
அவரை, பயறு குடும்பத்தைச் சார்ந்ததால் தனக்குத் தேவையான சத்துக்களை வேரில் வாழும் பாக்டீரியாவின் (Bacteria) துணையுடன் தயாரித்துக்கொள்ளும். பூச்சி, நோய் எதிர்ப்புசக்தி அதிகம். ஒருமுறை விதை ஊன்றினால் போதும், மறு ஆண்டு ஊன்றத் தேவையில்லை. விதைத்த 90ஆம் நாளில் ஊதா நிறப் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற இரண்டாம் வாரத்தில் நல்ல, 15 லிருந்து 22 செ.மீ. நீளமுடைய, மிருதுவான காய்கள் கிடைக்கும். ஒரு கொடியிலிருந்து நான்கு முதல் ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும். இவற்றின் இலைகள், வேர்க் கிழங்குகளைக் கூட சோயாபீன்ஸ் (Soya beans) போன்று உணவாகப் பயன்படுத்தலாம். அதிக அளவு அதாவது 35 லிருந்து 40 சதவீதம் புரோட்டீனும், சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, போலிக் அமிலங்களும் (Polic Acid) உள்ளன இவை,

பயன்கள்
பலபயன் மிக்க தாவர வகைகளில் ஒன்றான சிறகு அவரையை தென்னை மரங்களில் ஏற்றி வளர்ப்பதால் சிறந்த பசுமை மூடாக்காகவும், மூடுபயிராகவும் உள்ளது. இதனால் தென்னையில் (Coconut) தோன்றும் வாடல், சாறுவடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். தழையை உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம். புரோட்டீன் (Protein) பற்றாக்குறையுள்ள ஏழை, எளிய மக்களுக்கு இதன் பயன்பாடு மிகுந்த பலன் தரும் என்றார்.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories