கொய்யா
களர் நிலத்திலும் கூட வளரும் ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்களில் வரட்சியைத் தாங்கும்.
சப்போட்டா
இதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது ஓரளவுக்கு உவர்ப்பை தாங்கி வளரும். வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல் மண், செம்மண், கரிசல் மண், மணல் கலந்த மண் வகைகளில் நன்கு வளரும்.
மாதுளை
கலர் மற்றும் ஈரப்பதத்தை தாங்கி வளரும். ஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.
பப்பாளி
வடிகால் வசதியும் ,அதிக உரமும் இ டப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும்.
சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்களிலும் நீர் தேங்க கூடிய பகுதிகளிலும் நன்கு வளரும்.