வேளாண் டிப்ஸ்!

விவசாயத்தில் சில நுணுக்கங்களை பின்பற்றினால் அதிக லாபம் பெற முடியும். அந்த வகையில் சில முக்கிய தகவல்களை இங்கு காணலாம்

இயற்கை விவசாயம் தான் மிகச் சிறந்தது. செயற்கை முறையில் விவசாயம் செய்து கொண்டிருந்தாலும் பிறகு உடனடியாக இயற்கை முறையில் விவசாயம் செய்ய கூடாது இயற்கை விவசாயம் தொடங்கும் முன்பு நிலத்தில் பலதானிய விதைப்பு முறையை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மண் அதன் இயல்பு நிலைக்கு திரும்பும்.

கரும்பு சாகுபடியில் அறுவடைக்குப் பிறகு கரும்பு சோகைகளை அப்படியே நிலத்தில் விடாமல் அதை மூடாக்காக போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதுவே மல்கிய சிறந்த உரமாக மாறிவிடும் .நிலம் முழுவதும் ஒரே பயிரை பயிரிடுவதால் கலப்பு பயிராக பயிரிட வேண்டும் அப்பொழுதுதான் ஒன்றின் விலை குறையாமலும் மற்றொன்று கைகொடுக்கும்.

இயற்கை உர தயாரிப்புக்கு இலை தழைகள் தென்னை நார்க்கழிவு நெல் உமி வீணான தானியங்கள் போன்ற அனைத்து தாவரக் கழிவுகளையும் பயன்படுத்தலாம்.

விதை நிலக்கடலையை 40 கிலோவிற்கு 2 லிட்டர் என்ற அளவில் பஞ்சகாவியா தெளித்து 2 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும் .இதன்மூலம் வேர் அழுகல் நோய் வராது

வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளை பூச்சிகள் தாக்கினால் வெள்ளைப்பூண்டை அரைத்து அதனுடன் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். வீட்டுத்தோட்ட செடிகளில் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த சீத்தாப்பழ விதை, தங்க அரளி விதை, ஆகியவற்றை எடுத்து தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊற வைத்து அவற்றுடன் காதி சோப்பு சிறிதளவு கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

மரங்களில் உள்ள அணில்களின் தாக்குதலை சமாளிக்க ஒரு கைப்பிடி அளவு பூண்டை எடுத்து அரைத்து அதில் நான்கு லிட்டர் தண்ணீரில் கரைத்து மரங்களின் மீது தெளிக்கவேண்டும் .பூண்டு வாசனையில் அணில்கள் ஓடிவிடும்.

பயிர்களில் பூச்சித் தாக்குதலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக நடவு செய்வதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் கொட்டை தூள் இடவேண்டும் .கத்திரியில் பூச்சி தாக்குதலை சமாளிக்க நட்ட 30 நாட்கள் கழித்து ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு அளிக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories