ஆண் குழந்தையுடன் அப்பாக்களுக்கும் லாபம் கிடைக்கும் “பொன்மகன் சேமிப்புத் திட்டம்”!

பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் தான் இந்த “பொன்மகன் சேமிப்பு திட்டம்”. இதன் மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சேமிப்பு கணக்கை யார் பெயரில்?
ஆண் குழந்தையின் வயது 10 வயதிற்கு மேல் இருந்தால், அந்த குழந்தையின் பெயரிலேயே சேமிப்பு கணக்கை துவங்கலாம். அதேபோல் குழந்தையின் வயது 10 வயதிற்கு குறைவாக இருந்தால் இணைப்பு சேமிப்பு (joint account) கணக்காக துவங்கலாம். அதாவது parents name + child name-யில் account open செய்ய வேண்டும்.

மாறுபடும் வட்டி விகிதம்
பொதுவாக இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் ஆண்டுதோறும் மாறுபடுகிறது. தற்போதைய வட்டி விகிதம் 7.8%. இது மற்ற திட்டங்களோடு ஒப்பிடுகையில் சற்று அதிகம் தான். அதோடு இந்த திட்டத்தில் அஞ்சல் அலுவலகத்தில் அனைத்து பரிவர்த்தனையும் செய்து கொள்ள முடியும் என்பதால், கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

வரி சலுகை கிடைக்கும்
இந்த பொன்மகன் சேமிப்பு திட்டக் கணக்கில் போடப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும் நீங்கள் இந்த கணக்கு தொடங்கியதிலிருந்து 7வது ஆண்டு முதல் கணிசமான தொகையினை பெற்றும் கொள்ளும் வசதியும் உண்டு. அதே போல இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்து 5 ஆண்டுகளுக்கு நீங்கள் தேவைக்கேற்ப அதிகரித்து கொள்ளலாம். அதேசமயம், பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கான உரிய காரணத்தை கூற வேண்டும்.

வங்கிக் கடன் கிடைக்கும்
இந்த திட்டத்திலும் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியதிலிருந்து மூன்றாவது நிதியாண்டுக்குப் பின்னர் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் முதலீட்டிற்கு அரசு உத்தரவாதம்
இந்த திட்டம் இந்திய அரசின் தபால் துறை மூலம் இயக்கப்படுவதால் முதலீட்டு பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு. அதோடு இதில் கணிசமான லாபமும் இருக்கிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories