ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு தெரிவித்துள்ளது!

வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையின் உபரிநீரை 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 565 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேட்டூர் அணை 120 அடியை எட்டியதும் உபரிநீர் டெல்டா பாசனத்திற்கு போக மீதம் கடலில் கலந்து வருகிறது எனவே,

தண்ணீர் விநியோகம் (Water Supply)
மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீர் கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு முதலில்கொண்டு செல்லப்படும். பின்னர், அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரி துணை நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் ஏரி துணை நீரேற்று நிலையம், கண்ணந்தேரி ஏரி துணை நீரேற்று நிலையம் ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் எனவே,

இத்திட்டத்தால் மொத்தம் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும. இதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் மற்றும்,

பொருளாதாரம் உயரும் (The economy will rise)
இதனால் விவசாயம், கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேன்மையடையும். மேலும், மக்களின் பொருளாதார நிலை உயரும் என்றார்.

மும்முனை மின்சாரம் (Three-phase power)
குறுகிய காலத்தில் மேட்டூர் உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories