விவசாயிகளுக்கு இலவச கோகோ செடி கன்று வழங்குதல்!

திண்டுக்கலில் இந்தோ – இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தின் சார்பில் முதல் முறையாக சோதனை முயற்சியில் கோகோ செடி கன்று நடவு செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் இந்தோ – இஸ்ரேல் தொழில்நுட்ப காய்கறி மகத்துவ மையம் இயங்கி வருகிறது.

இலவச நாற்று (Free seedling)
இதில் பல வகையான காய் கனிகள் உயர் தொழில்நுட்ப முறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட காய்கனி விதைகளை நடவு செய்து அவைகளை வளர்த்து அந்த நாற்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

பசுமைக் குடில் (Green house)
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாகச் சோதனை முயற்சியில் கோகோ விதைகளைப், பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் இருந்து வாங்கி வந்து இந்தோ – இஸ்ரேல் உயர் தொழில்நுட்ப முறையில் அவற்றினை பசுமைக் குடில் மூலம் பாதுகாத்தனர்.

பின்னர் நடவு செய்து 3 மாத கோகோச் செடிக் கன்றுகளை வளர்த்து தற்போது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளனர்.

கோகோ பயிர் (Cocoa crop)
பொதுவாகவே கோகோ பயிர் அதிக வெப்பம் இல்லாத மிதமான குளிர் சூழலில் வளரக்கூடிய நிழல் பயிராகும்.

3 பகுதி விவசாயிகளுக்கு (For 3 area farmers)
இந்த கோகோ கன்றுகளை கொடைக்கானல், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

எனவே இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, உங்கள் பகுதியில் உள்ள வேளாண் அலுவலகம் மூலம் தோட்டக் கலை பண்ணையில் இலவசமாக கோகோ கன்றுகள் வழங்கப்பட உள்ளன எனவே

நில ஆவணங்களுக்கு ஏற்ப (According to land documents)
வேளாண் அலுவலகத்தில் முன்பதிவு செய்திருக்கும் விவசாயிகளுக்கு அவர்களின் நில ஆவணங்களை சரிபார்த்து விவசாய நிலத்திற்கு ஏற்றவாறு கோகோக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ள தாக இந்தோ – இஸ்ரேஸ் மைய அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories