வேளாண்காடு வளர்ப்புத் திட்டம்! நீடித்த பசுமை போர்வை காண இயக்கம்

\\\\\\\\\\\\\\\\\\\\\

 

விவசாயிகள் மரம் வளர்ப்பில் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை காண இயக்கம் என்ற புதிய வேளாண்காடு வளர்ப்புத் திட்டத்தில் 2021 முதலில் 2022ஆம் ஆண்டில் ஒரு ரூபாயில் 11.14 கோடி மதிப்பில் செயல்படுத்திட சமீபத்தில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இத்திட்டத்தின் பயன்கள்

நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகுக்கும்.

மண்வளம் அதிகரிக்கும் சுற்றுப்புற சூழலும் மேம்படும்.

வழங்கப்படும் மரங்கள்

தேக்கு, மகோகனி, ஈட்டி, மருது, வேம்பு ,மலைவேம்பு ,நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான ரூபாய் 15 மதிப்புள்ள மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறையினர் நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

வழங்கப்படும் மரங்களின் எண்ணிக்கை

மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் வரப்புகளில் அல்லது குறைந்து விரைவில் விவசாய நிலங்களில் நடவு செய்யலாம் வரப்பின் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும் மிகாமலும் விவசாய நிலங்களில் குறைந்த செலவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 120 மரக்கன்றுகள் மிகாமலும் வழங்கப்படும்.

ஊக்கத்தொகை

நடவு செய்த 2-ம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் மரக் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூபாய்14 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 21 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

அடங்கல் பதிவேட்டில் பதிவு

மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும்போது வனத்துறையின் அனுமதி விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் நடவு செய்த மரக் கன்றுகள் அனைத்தும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முன்னுரிமை

சிறு குறு விவசாயிகள் பெண் விவசாயிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மரக்கன்றுகள் பெற

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அல்லது உழவன் செயலி வாயிலாக தங்கள் பெயரை பதிவு செய்து உரிய அலுவலரின் பரிந்துரைப்படி தேவையான மரக்கன்றுகளை அருகில் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories